TamilSaaga

“புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்” : அமைச்சர் Koh Poh Koon வெளியிட்ட புகைப்படங்கள்

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை காக்ரேன் பொழுதுபோக்கு மையத்தில் தீபாவளியைக் கொண்டாட எங்கள் இந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் நாங்கள் இணைந்தோம் என்று சிங்கப்பூரின் மூத்த மாநில அமைச்சர் (சுகாதாரம் மற்றும் மனிதவள அமைச்சகம்) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் Koh Poh Koon தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

பிங்கோ உள்பட பல விளையாட்டுகளை தொழிலாளர்கள் விளையாடி மகிழ்ந்தனர். மேலும், பிரியாணி, பழங்கள் மற்றும் பிற கலாச்சார விருந்துகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஹெல்த்சர்வ் எங்கள் பணியாளர்களை மனநலம் பற்றிய விழிப்புணர்வில் ஈடுபடுத்த கலை நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது. MOM’s Assurance, Care and Engagement (ACE) குழு எங்கள் சமூகப் பங்காளிகளுடன் இணைந்து திட்டமிட்ட தீபாவளி நடவடிக்கைகளில் தொழிலாளர்கள் பங்கேற்று மகிழ்ச்சியடைந்தனர் என்று அவர் கூறினார்.

மேலும் Zaqy Mohamed வெளியிட்ட முகநூல் பதிவில் துவாஸ் சவுத் ரிக்ரியேஷன் சென்டரில் நேற்று நடந்த தீபாவளி கொண்டாட்டங்களில் பங்கேற்றதில் மகிழ்ச்சி என்று கூறினார். ஹோப் இனிஷியேட்டிவ் அலையன்ஸ், புலம்பெயர்ந்த தொழிலாளர் மையம், புலம்பெயர்ந்தோர் ஆதரவு கூட்டணி, ஹெல்த் சர்வ் மற்றும் இட்ஸ் ரெயின்கோட்ஸ் போன்ற பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து நமது இந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பண்டிகைக் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது.

பொழுதுபோக்கு மையத்தின் செயல்பாடுகளுக்கு அப்பால், எங்கள் இந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் தங்கள் பிரார்த்தனைகளை வழங்குவதற்காக நாடளாவிய ரீதியில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த முழு சமூக முயற்சியின் மூலம், நமது புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ஆன்மீகத் தேவைகள், நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பைத் தொடர்ந்து கவனிப்போம் என்று அவர் கூறினார்.

Related posts