TamilSaaga

“சிங்கப்பூரை இனி எந்த ரூபத்திலும் யாரும் மிரட்ட முடியாது”.. கம்பீரத்துடன் உருவாகிறது “நான்காவது தற்காப்புப் படை” – செம!

நமது சிங்கப்பூர் ஆயுதப்படையில் ஏற்கனவே ராணுவப்படை, கடற்படை, ஆகாயப்படை ஆகியவை உள்ளன. இந்நிலையில், நான்காவது தற்காப்புப் படை புதியதாக இணையவுள்ளது.

ஆம்! ‘Digital and Intelligence Service (DIS)’ என்­ற­ழைக்­கப்­படும் மின்­னி­லக்க, உள­வுத்­துறைப் படை இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கப்பட உள்ளதாக தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென் நாடாளு­மன்­றத்­தில் அறிவித்துள்ளார்.

இந்த நவீன உலகில், ஒவ்வொரு நாடுகளும் சந்தித்து வரும் பிரச்சனை டிஜிட்டல் சார்ந்தவையாகத் தான் உள்ளது. அணுகுண்டு வீசி அழிப்பது என்பதெல்லாம் ‘பாட்டி காலத்து டெக்னிக்’ ஆகிவிட்டது. டிஜிட்டல் யுகத்தில் ஹேக்கிங் தான் அனைத்து வல்லரசு நாடுகளையும் அலற வைத்துக் கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க – தாயின் கழுத்தில் வழிந்த ரத்தம் : திடுக்கிட்டுப்போன மகன் – சற்று நேரத்தில் பரபரப்பான சிங்கப்பூர் Yishun பகுதி

எப்பேற்பட்ட வலிமையான டெக் டீம் இருந்தாலும் ஹேக்கர்கள் புகுந்து விளையாடிவிடுகின்றனர். முக்கிய தலைவர்களின் சமூக தள பக்கங்கள் ஹேக் செய்வது கூட 10 வருடத்துக்கு முந்தைய டெக்னிக் ஆகிவிட்டது. இப்போதெல்லாம், ஒவ்வொரு நாட்டின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களும், ராணுவ ரகசியங்கள் அடங்கிய கோப்புகள் ஹேக் செய்யப்படுகிறது.

இப்படி டிஜிட்டல் களத்தில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள டிஜிட்டல் மற்றும் புலனாய்வு சேவை (DIS) தொடங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். இனிமேல், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கு பிறகு SAF இன் நான்காவது சேவை இதுதான்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், “எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, டிஜிட்டல் மிரட்டல்களை சமாளிக்க நாம் இப்போதே தயாராக இருக்க வேண்டும். சரி­யான நேரத்­தில் துல்­லி­ய­மான, தேவையான எச்­ச­ரிக்­கை­கள் ஆகியவற்றை இந்த டிஜிட்டல் மற்றும் புலனாய்வு சேவை (DIS) நமக்கு வழங்­கும்” என்று அமைச்சர் கூறினார்.

Related posts