TamilSaaga

“மீண்டும் புதிய உச்சம்” : சிங்கப்பூரில் Dormitoryகளில் 713 பேருக்கு தொற்று – தீவில் மேலும் 9 பேர் பலி

சிங்கப்பூரில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 5) மதியம் நிலவரப்படி நாட்டில் புதிதாக 3,486 பெருந்தொற்று வழக்குகள் பதிவாகியுள்ளன. மேலும் இந்த வைரஸ் சிக்கல்களால் மேலும் 9 இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்த சமீபத்திய இறப்புகளில் 64 முதல் 90 வயதுக்குட்பட்ட ஆறு ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் அடங்குவர். அவர்களில் மூன்று பேர் பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடப்படவில்லை. இரண்டு பேருக்கு ஓரளவு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மற்றும் நான்கு பேருக்கு தடுப்பூசி முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் பல்வேறு அடிப்படை மருத்துவ நிலைமைகள் இருந்தன என்று MOH தெரிவித்துள்ளது.

இதன்மூலம் தற்போது சிங்கப்பூரில் பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130 ஆக உயர்ந்துள்ளது. புதிய வழக்குகளில், 3,480 உள்நாட்டில் பரவும் நோய்த்தொற்றுகள், சமூகத்தில் 2,767 வழக்குகள் மற்றும் 713 தங்குமிட குடியிருப்பாளர்களை உள்ளடக்கியது. மேலும் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்த 6 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தனது தினசரி பதிப்பில் நேற்று இரவு 11 மணியளவில் ஊடகங்களுக்கு வெளியிட்டது.

தினசரி வழக்குகளில் இதுவரை கடந்த அக்டோபர் 1 அன்று பதிவான 2,909 நோய்த்தொற்றுகள் தான் அதிக அழ;அளவாக இருந்தது என்பது குறிப்படத்தக்கது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, சிங்கப்பூர் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து இதுவரை மொத்தம் 1,09,804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டோ பயோவில் உள்ள யுனைடெட் மெடிகேர் சென்டர் உட்பட ஐந்து செயலில் உள்ள கிளஸ்டர்களை “நெருக்கமாக கண்காணிப்பதாக” MOH தெரிவித்துள்ளது. ஒரு முதியோர் இல்லம் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

ஏஎஸ்பிஆர்ஐ-வெஸ்ட்லைட் பாப்பான் டார்மடரி, டம்பைன்ஸ் டார்மடரி மற்றும் ஜுரோங் பெஞ்சுரு டார்மடரி 2 ஆகிய மூன்று விடுதிகள் கொத்துகளின் பட்டியலில் உள்ளன.

Related posts