TamilSaaga

சிங்கப்பூரில் பணிப்பெண்கள் பரிசோதனை செலவுகள்.. முதலாளிகளே ஏற்க வேண்டும் – விதிமுறைகள் அறிவிப்பு

சிங்கப்பூரில் பணிப்பெண்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு வேலை இடமாற்றம் செய்யும் போது அவர்களுக்கு தனிமை உத்தரவு மற்றும் கோவிட்19 சோதனை உள்ளிட்டவை செய்யப்பட வேண்டும்.

இதற்காக ஆகும் செலவுகளை பழைய வேலையிடத்தின் முதலாளியும் புதிய வேலையிடத்தின் முதலாளியும் சேர்ந்து இந்த செலவை ஏற்க வேண்டும் என மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பணிப்பெண்கள் 12 மாதத்திற்குள் இடமாற்றம் செய்யும் போது இந்த நடைமுறை பின்பற்ற வேண்டும். வேலை செய்த பணிக்காலத்துக்கு ஏற்ப இந்த செலவுகள் பிரிக்கப்பட வேண்டும்.

உதாரணமாக ஒரு பணிப்பெண் தனது 12 மாத பணிக்காலத்துக்கு முன்பாக 6 மாதம் ஓர் இடத்திலும் பிறகு வேறு இடத்துக்கு மாறுகிறார் என்றார் பழைய முதலாளியும் புதிய முதலாளியும் செலவை சரி பாதியாக பிரித்துக்கொள்ள வேண்டும் என அறிவுதுத்தப்பட்டுள்ளது.

வீட்டிலே தனிமைபப்டுத்தும் உத்தரவை முடித்த பணிப்பெண்கள் 12 மாத காலத்துக்குள் இடமாற்றம் செய்யப்பட்டால் இந்த நடவடிக்கை பொருந்தும்.

பரிசோதனை போன்ற கட்டணங்களை அதிக அளவில் பழைய முதலாளிகள் கேட்கக்கூடாது.

செலவை பகிர இரு முதலாளிகளும் சரியான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வேண்டும் போன்ற வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

Related posts