TamilSaaga

சிங்கப்பூரில் அதிகரிக்கும் வாகன விபத்து.. போலீஸ் படை பகீர் தகவல் – முழு விவரங்கள்

சிங்கப்பூர் போலீஸ் படையின் (SPF) தரவுகளின்படி, 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அதிக போக்குவரத்து விபத்துக்கள் ஏற்பட்டு 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

சாலை பயணிகள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததே இந்த விபத்து அதிகரிப்புக்கு காரணம் என்று SPF நேற்று புதன்கிழமை (செப் 8) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது

இருப்பினும், 2019 ஆம் ஆண்டின் முதல் பாதியில் கோவிட்-க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும் போது, உயிரிழப்புகள் அல்லது காயங்கள் ஏற்படும் மொத்த போக்குவரத்து விபத்துக்களின் எண்ணிக்கை 21.8 சதவிகிதம் குறைந்துள்ளது.

2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 2,998 விபத்துகள் நடந்ததாக SPF கூறியது, இது கடந்த ஆண்டு இதே காலத்தில் பதிவான 2,579 ல் இருந்து 16.2 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்த இறப்புகள் மற்றும் காயங்களின் எண்ணிக்கை 3,108 இலிருந்து 3,635 ஆக 17 சதவீதம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு 51 உயிரிழப்புகளுடன் உடன் ஒப்பிடுகையில் தற்போது 58 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 49 பேரில் இருந்து காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 52 பேர் என உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts