TamilSaaga

சிங்கப்பூரின் மிகப்பெரிய தமிழ் இலக்கியத் தொகுப்பு.. பொதுமக்களுக்காக திறப்பு – திருக்குறளை மேற்கோள்காட்டி அசர வைத்த அமைச்சர்!

சிங்கப்பூர்: திருக்குறளின் 17 மொழிபெயர்ப்புகள் உட்பட 20,000 ஆதாரங்களைக் கொண்ட நாட்டின் மிகப் பெரிய தமிழ் இலக்கியத் தொகுப்பு இன்று (ஏப்.16) பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்பட்டது.

தமிழ் சோலை (Tamil Cholai) என்று அழைக்கப்படும் இந்த தொகுப்பு உட்லண்ட்ஸ் பிராந்திய நூலகத்தில் (WRL) வைக்கப்பட்டுள்ளது.

ஒரு பிராந்திய நூலகமாக, WRL தமிழ் மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. மேலும் சிங்கப்பூரின் பன்முக கலாச்சார சமூகத்திற்கான அடையாளமாகவும் விளங்குகிறது. தமிழ் பேசும் மக்களுக்காக அதிக நிகழ்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

உச்சி வானில் ஓங்கி ஒலித்த தமிழ்.. இண்டிகோ விமானத்தில் தமிழில் கவிதை மழை… புத்தாண்டு வாழ்த்து சொன்ன இண்டிகோ விமான “கேப்டன்” – மெய்மறந்து கைத்தட்டிய பயணிகள்

திருக்குறளின் 17 மொழிபெயர்ப்புகள் மற்றும் ஆங்கிலம், சீனம், மலாய் ஆகிய மொழிகளில் உள்ள 17 மொழி பெயர்ப்புகள் குறித்து சிறப்புரையாற்றிய தகவல் தொலைத் தொடர்பு அமைச்சர் ஜோசபின் தியோ பேசுகையில், தமிழ்ச் சோலை என்பது தமிழ்ச் சமூகத்துக்கு மட்டுமல்ல… சிங்கப்பூரின் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதில் இது மற்றொரு படியாக இருக்கும் – ஒவ்வொரு சமூகமும் மற்ற கலாச்சாரங்களைப் பற்றி அறிந்துகொள்வதன் மூலம் தங்கள் சொந்த மொழியையும் கமற்ற லாச்சாரத்தையும் கொண்டாட முடிகிறது.

திருக்குறளில் இருந்து இரண்டு குறளை மேற்கோள் காட்டி பேசிய திருமதி தியோ, சிங்கப்பூரில் உள்ள நூலகங்களின் பங்கு தொடர்பான மூன்று முக்கிய அம்சங்களையும் எடுத்துக்காட்டினார்.

WRL இன் இரண்டாம் நிலையில் அமைந்துள்ள தமிழ் சோலை சமகால மற்றும் செம்மொழியான தமிழ் படைப்புகளை வழங்குகிறது. ஆங்கிலம், மலாய் மற்றும் சீன மொழிகளில் சிறப்பாகத் தொகுக்கப்பட்ட சுமார் 1,000 படைப்புகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

தமிழ் மொழி பேசாதவர்கள், தமிழ் வரலாறு, கலாச்சாரம் மற்றும் கலைகள் தொடர்பான மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் மூலம் இந்த வரலாறை அறியலாம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts