TamilSaaga
Public Holidays

நீண்ட வார இறுதி நாள்கள் கொண்ட 2026 – MOM கொடுத்த இனிப்பான அப்டேட்

சிங்கப்பூரின் மனிதவள அமைச்சகம் எதிர்வரும் 2026ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. வெள்ளி கிழமைகளில் சில விடுமுறை நாள்கள் வருவதால், 2026ம் ஆண்டில் நீண்ட வார இறுதி கொண்ட விடுமுறை நாள்கள் அதிகம் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம்

எதிர்வரும் 2026ம் ஆண்டில், சிங்கப்பூரர்கள் மொத்தம் ஆறு நீண்ட வார இறுதி நாள்களை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும் என்று மனிதவள அமைச்சகம் (MOM) இன்று ஜூன் 16 அன்று வெளியிட்ட அரசிதழ் பொது விடுமுறை பட்டியலில் தெரிவித்துள்ளது. 2026ம் புத்தாண்டு வியாழக்கிழமை துவங்கும் நிலையில், மொத்தமாக அடுத்த ஆண்டு 11 பொது விடுமுறை நாள்கள் உள்ளன.

2026ம் ஆண்டில் ஏப்ரல் 3ம் தேதி வரும் புனித வெள்ளி தான், அந்த ஆண்டின் முதல் பொது விடுமுறை மற்றும் நீண்ட வார இறுதியைக் குறிக்கும் நாளாகும். மேலும் தொழிலாளர் தினம் (மே 1) மற்றும் கிறிஸ்துமஸ் தினம் (டிசம்பர் 25) ஆகியவை வார இறுதி நாளான வெள்ளிக்கிழமைகளில் வருகின்றது.

பொது விடுமுறை நாள்

அதே நேரம் வெசாக் தினம் (மே 31), சிங்கப்பூரின் தேசிய தினம் (ஆகஸ்ட் 9) மற்றும் தீபாவளி திருநாள் (நவம்பர் 8) ஆகியவை ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால், அதைத் தொடர்ந்து வரும் திங்கட்கிழமைகள் பொது விடுமுறை நாட்களாகக் குறிப்பிடப்படும் என்பது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது.

இதை தவிர பிப்ரவரி 17 மற்றும் 18 (செவ்வாய் மற்றும் புதன்) ஆகிய தேதிகளில் சீனப் புத்தாண்டு, மார்ச் 21 (சனிக்கிழமை) ஹரி ராயா பூசா, மே 27 (புதன்கிழமை) ஹரி ராயா ஹாஜி ஆகியவை பிற பொது விடுமுறை நாட்களாகும் என்றும் சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2024 மற்றும் இந்த 2025ம் ஆண்டை ஒப்பிடும்போது அதிக அளவிலான பொது விடுமுறை நாள்கள் கொண்ட வருடமாக மாறியுள்ளது 2026ம் ஆண்டு.

Scootக்கு போட்டியாக பட்ஜெட் விலையில் களமிறங்கும் ஒரு ஏர்லைன்ஸ் – சிங்கப்பூர் மக்களுக்கு ஜாக்பாட்!

புத்தாண்டு தினம் – ஜனவரி 1 – வியாழக்கிழமை
சீன புத்தாண்டு – பிப்ரவரி 17 மற்றும் 18 – செவ்வாய் மற்றும் புதன்கிழமை
Hari Raya Puasa – மார்ச் 21 – சனிக்கிழமை
புனித வெள்ளி – ஏப்ரல் 3 – வெள்ளிக்கிழமை
உழைப்பாளர் தினம் – மே 1 – வெள்ளிக்கிழமை
Hari Raya Haji – மே 27 – புதன்கிழமை
வெசாக் நாள் – மே 31 – ஞாயிற்றுக்கிழமை
சிங்கப்பூர் தேசிய தினம் – ஆகஸ்ட் 9 – ஞாயிற்றுக்கிழமை
தீபாவளி திருநாள் – நவம்பர் 8 – ஞாயிற்றுக்கிழமை
கிறிஸ்துமஸ் பண்டிகை – டிசம்பர் 25 – வெள்ளிக்கிழமை

Related posts