TamilSaaga

கொரோனாவிற்கு பிறகு புது அவதாரம் எடுத்த சிங்கப்பூர் “சாங்கி விமான நிலையம்”… 4500 க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

கொரோனா நோய் தொற்று பரவலுக்கு பின்பு தற்பொழுது சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் நன்கு வளர்ச்சியடைந்து வருவதால் வரும் வருடங்களில் 4500 க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கான ஆட்களை தேர்வு செய்யப் போவதாக சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சர் சீ கொங் டாட் கூறுகையில், கொரோனா நோய் தீவிரத்தில் இருந்த பொழுது விமானத்துறை வீழ்ச்சியடைந்த அதன் காரணமாக மூன்றில் ஒரு பகுதி ஊழியர்கள் சாங்கி விமான நிலையத்திலிருந்து பணியிழந்தனர்.

தற்பொழுது நோய் பரவலுக்கு பின் நிலைமை சீராகி வரும் நிலையில், விமான பயணிகளின் கணிசமான எண்ணிக்கையால் சாங்கி விமான நிலையம் ஆனது அதிகப்படியான பயணிகளை பதிவு செய்து சாதனை புரிந்தது. இந்நிலையில் தற்பொழுது விமான நிலையத்திற்கு தேவையான ஊழியர்களின் விகிதமும் அதிகரித்துள்ளது. எனவே, ஏற்கனவே பணியில் இருந்த ஊழியர்களின் விகிதத்தினை சமன் செய்ய கிட்டத்தட்ட 4500 க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப போவதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விமான நிலையங்களை பொருத்தவரை, பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு உலக நாடுகள் அனைத்தும் போட்டி போட்டு விமான நிலையத்தினை சீரமைத்து வருகின்றன. எனவே சாங்கி விமான நிலையத்தை மேம்படுத்துவதற்காக பல பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரின் அந்தஸ்தின் ஒரு பகுதியாக சாங்கி விமான நிலையம் இருந்து வருவது மறுக்க முடியாத ஒன்றாகும்.

எனவே அந்த பெயரை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் விமான நிலையம் ஆனது மேலும் மேம்படுத்தப்படும் என்றும் 2024 ஆம் ஆண்டில் ஊழியர்களின் எண்ணிக்கையும் சமன் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வரும் ஆண்டில் விமான போக்குவரத்து துறையில் ஏராளமான பணி வாய்ப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Related posts