சிங்கப்பூரில் செப்டம்பர் 11ல் தொடங்கப்பட்ட புதிய பேருந்து சேவை, கிரான்ஜி மற்றும் யூ டீ MRTயில் இருந்து நேராக சுங்கேய் காடுட் தொழிற்பேட்டை மற்றும் கிரான்ஜி கிராமப்புறங்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்லும். புதிய சுங்கேய் காடுட் ஈக்கோ பஸ் (R70) சேவை Rush Owl நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. மற்றும் இந்த பயணத்திற்கான விலைகள் 1 வெள்ளியில் இருந்து தொடங்கி தினமும் இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பேருந்து சேவை நேர விவரம்
காலை 7 மணி முதல் 9 மணி வரை
மதியம் 11.30 மணி முதல் 2.30 மணி வரை
மாலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை
ஒவ்வொரு பிக்-அப் நேரங்களுக்கு இடையே சுமார் 20 நிமிட காத்திருப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பயணத்தின்போது நீங்கள் பார்வையிடக்கூடிய சில இடங்களும் உள்ளன. அவர் பின்வருமாறு,
கிரான்ஜி மார்ஷஸ்
சுங்கேய் பூலோ
வெட்லாண்ட் ரிசர்வ்
நை ஃபோ கார்ட்னேசியா
பாலிவுட் பண்ணைகள்
ஹே டெய்ரீஸ்
ஜூரோங் தவளை பண்ணை
டாங் ஹப் தோட்டங்கள்
கல்லாப் கிரஞ்சி பண்ணை ரிசார்ட்
நீங்கள் எப்படி ஒரு பயணத்தை பதிவு செய்யலாம்?
நீங்கள் முதல் முறையாக RushTrail பயன்பாட்டைப் பயன்படுத்துபவராக இருந்தால், முதலில் அந்த செயலியை பதிவிறக்கம் செய்யவேண்டும்.
மேலு நீங்கள் அந்த செயலிக்குள் நுழைந்தவுடன், R70 பாதையைத் தேர்வுசெய்யுங்கள். இப்போது, நீங்கள் கிடைக்கும் அனைத்து நேரங்களையும் பார்க்க முடியும் மற்றும் உங்களுக்கு ஏற்ற பிக்-அப் நேரத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். அதன் பிறகு நீங்கள் உங்கள் பயணத்தை புக் செய்யலாம் என்று மதர்ஷிப் நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.