TamilSaaga

“சிங்கப்பூரில் இளம் பெண்களை காக்க சட்டத்திற்கு அப்பாற்பட்டு நாம் செல்லவேண்டும்” – ஹலீமா ஆவேசம்

சிங்கப்பூரில் இளம், பாதுகாப்பற்ற சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளைப் பற்றி படிக்கும்போதெல்லாம் என் வயிறு கலங்குகிறது என்று சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யாக்கோப் தனது முகநூல் பதிவில் மிகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த கொடுமைகள் பெருமளவு வீட்டில் நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“கற்பழிப்புகள் என்பது மிகவும் கொடூரமான குற்றங்கள், அதே போல குறிப்பாக இளம் குழந்தைகள் மீது நடக்கும் இந்த வன்முறை மிகவும் கொடியது. இதனால் அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறுகின்றது. உடல் ரீதியாக மட்டுமல்லாமல் உளவியல் ரீதியாகவும் அந்த இளம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகுந்த வேதனையடைகின்றனர்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“இதுபோன்ற வழக்குகளில் தண்டனைக்குட்பட்ட நபர்கள் தங்களது தண்டனைக்காலம் முடிந்த பிறகு சுதந்திரமாக வெளியேறுகின்றனர். மேலும் அந்த குற்றவாளிக்கு 50 வயதுக்கு மேல் என்றால் அவருக்கு பிரம்படியும் வழங்கப்படுவதில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட அந்த குழந்தை நீண்ட காலமாக வலியிலும் வேதனையிலும் சிக்கி தவிக்கிறது” என்றார்.

ஹலீமா யாக்கோப் உரையை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

“இந்த ஆண்டு மட்டும் மூன்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர். தன் மகளை 7 வயதிலிருந்து பாலியல் பலாத்காரம் செய்த தந்தை. வளர்ப்பு பேத்தியை 9 வயதில் இருந்து பாலியல் பலாத்காரம் செய்த தாத்தா என்று என்று இந்த பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது” என்றார் அவர். எனவே, பாலியல் குற்றங்களுக்கான சிறைத் தண்டனையை அதிகரிப்பதற்கான பாராளுமன்றத்தின் முடிவு, சிறாருக்கு பாலியல் படத்தை பார்க்க வைப்பது உட்பட, மிகவும் சரியான நேரத்தில் மற்றும் மோசமாக தேவைப்படுகிறது.

“எனவே, இளம் பெண்களைப் பாதுகாக்க நாம் சட்டத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்” ஆணித்தரமாக கூறியுள்ளார் ஹலீமா.

Related posts