TamilSaaga

“சிங்கப்பூரின் வாடகை ஆதரவு திட்டம்” : இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள் விரைவில் வழங்கப்படும் – Detailed Report

சிங்கப்பூரில் 35,800-க்கும் மேற்பட்ட குத்தகைதாரர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் தங்கள் இரண்டாவது முறை வாடகை ஆதரவு திட்டத்தின் (RSS) கொடுப்பனவுகளை செப்டம்பர் 22 முதல் பெறுவார்கள். இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 17) வெளியான ஒரு கூட்டு அறிக்கையில், சிங்கப்பூரின் உள்நாட்டு வருவாய் ஆணையம் மற்றும் நிதி அமைச்சகம் (MOF) ஆகியவை சுமார் 200 மில்லியனுக்கும் அதிகமான கொடுப்பனவுகள், திட்டமிடப்பட்டதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

வெளியிடப்பட்ட அந்த கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது “கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல் RSS கொடுப்பனவு வழங்கப்பட்டது போல, வாடகை ஆதரவு திட்டம், நில உரிமையாளர்கள் வழியாக செல்லாமல் நேரடியாக வாடகைதாரர்களுக்கு வழங்கப்படும். இந்த பணம் செலுத்தும் வழிமுறை குத்தகைதாரர்களுக்கு RSS கொடுப்பனவுகளை அரசிடமிருந்து உடனடியாக பெற அனுமதித்துள்ளது.”

சிங்கப்பூரில் கடந்த ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 18 வரை இரண்டாம் கட்டம் கட்டுப்பாடுகள் அமலில் இருந்த நேரத்தில் வாடகை செலவுகளுடன் வணிகங்களை ஆதரிக்கும் நடவடிக்கையாக, இரண்டாவது RSS கொடுப்பனவு கடந்த ஜூலை 23ம் தேதியன்று MOF மூலம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த இரண்டாவது கட்ட கொடுப்பனவு ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 18 வரையிலான காலத்திற்கான அரை மாத வாடகைக்கு சமமாக இருக்கும்.

மொத்தத்தில் இந்த இரண்டு RSS கொடுப்பனவுகள், வணிகங்களின் வாடகை செலவுகளை சுமார் 400 மில்லியனுக்கும் அதிகமான அளவில் ஆதரிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தகுதியானவர்களுக்கு அவர்களின் RSS ரொக்கப் பணம் குறித்த தகவல் தபால் மூலம் அறிவிக்கப்படும். அதேசமயம் அவர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கடிதத்தின் நகலை வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் myTax போர்ட்டலில் உள்நுழைந்து பார்க்கலாம் என்று MOF தெரிவித்துள்ளது.

மேலும் PayNow அல்லது தற்போதுள்ள ஜிரோ ஏற்பாடுகள் இல்லாதவர்கள், வரும் அக்டோபர் 6 ம் தேதிக்குள் தங்களுக்கான காசோலைகளைப் பெறுவார்கள். தகுதியுள்ளவர்களாக இருந்தும், ஆனால் பணம் செலுத்தும் அறிவிப்பைப் பெறாதவர்கள், IRAS எனப்படும் (Inland Revenue Authority of Singapore) சிங்கப்பூரின் உள்நாட்டு வருவாய் ஆணையத்திடம் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் செப்டம்பர் 29ம் தேதி திறக்கப்பட்டு நவம்பர் 12ம் தேதி முடிவடையும்.

Related posts