TamilSaaga

சிங்கப்பூரில் Dormitoryயில் மேலும் 601 பேருக்கு தொற்று : விடுதிகளை தீவிரமாக கண்காணிக்கும் MOH

சிங்கப்பூரில் கடந்த திங்கள்கிழமை (அக்டோபர் 4) நண்பகல் நிலவரப்படி 2,475 புதிய பெருந்தொற்று வழக்குகள் நாட்டில் பதிவாகியுள்ளன. இது கடந்த இரண்டு நாட்கள் தொற்று வீழ்ச்சியடைந்த நிலையில் நேற்று மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாட்டில் பெருந்தொற்று காரணமாக மேலும் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை சிங்கப்பூரில் தொற்று காரணமாக ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை 121 ஆக உஉயர்ந்துள்ளது.

இறந்த எட்டு பேரில் நான்கு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் அடங்குவர், அனைவரும் சிங்கப்பூரர்கள் மற்றும் 60 முதல் 94 வயதுக்குட்பட்டவர்கள். இறந்த அவர்களில் மூன்று பேர் பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடப்படவில்லை மற்றும் ஐந்து பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்கள் அனைவருக்கும் பல்வேறு அடிப்படை மருத்துவ நிலைமைகள் கொண்டிருந்தார்கள் என்று MOH தெரிவித்துள்ளது. நேற்று பதிவான புதிய வழக்குகளில், 2,460 உள்நாட்டில் பரவும் நோய்த்தொற்றுகள் ஆகும், இதில் சமூகத்தில் 1,859 வழக்குகள் மற்றும் 601 தங்குமிட குடியிருப்பாளர்கள் அடங்குவர்.

கடந்த திங்கள் நிலவரப்படி, சிங்கப்பூரில் தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து இதுவரை மொத்தம் 1,06,318 வழக்குகள் பதிவாகியுள்ளன. தற்போது மருத்துவமனையில் 1,355 நோயாளிகள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் நலமுடன் மற்றும் கண்காணிப்பில் உள்ளனர் என்று MOH தெரிவித்துள்ளது. அவர்களில் ஆக்ஸிஜன் சப்ளிமெண்ட் தேவைப்படும் 226 தீவிர நோய் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) 35 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். மிகவும் நோய்வாய்ப்பட்டவர்களில் 221 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

சிங்கப்பூரில் ஐந்து தங்குமிடங்கள் கிளஸ்ட்டர்கள் பட்டியலில் உள்ளன : ASPRI-Westlite Papan Dormitory, PPT Lodge 1B Dormitory and Avery Lodge, அத்துடன் Tampines Dormitory மற்றும் 9 Defu South Street 1 இல் உள்ள தங்குமிடம் ஆகியவற்றில் தொற்று காணப்பட்டுள்ளது.

Related posts