TamilSaaga

தமிழகத்தில் இனி Skilled Test கிடையாதா? சிங்கப்பூரில் வேலைக்கு வர நினைப்பவர்களுக்கு இனிப்பான செய்தி! இந்த நியூஸை படிச்சிட்டு இன்ஸ்டிட்யூட்டில் பணத்தை கட்டுங்க!

SINGAPORE: சிங்கப்பூரில் தான் இனி டெஸ்ட் அடிக்க முடியும் என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில், நமது ‘தமிழ் சாகா சிங்கப்பூர்’ செய்தி குழு உங்களுக்கான பிரத்யேக தகவலை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

தமிழகத்தில் இருந்து டெஸ்ட் அடித்து விட்டு பெரும்பாலானோர் சிங்கப்பூர் வராததால் கோட்டாவின் அளவினை கட்டுப்படுத்தி இருப்பது என்பது அனைவரும் தெரிந்த செய்தி தான். இதனால் சிங்கப்பூரில் தான் இனி Skilled டெஸ்ட் நடக்கும் என சமீப நாட்களாக ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கின்றன. இதுகுறித்து பலரும் கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தனர். குறிப்பாக, தமிழகத்தில் இனி skilled டெஸ்ட் நடக்காது என்ற தகவல் செய்திகளாக வந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து நமது தமிழ் சாகா சார்பில் தொடர்ந்து பல்வேறு அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் நமக்கு கிடைத்திருக்கும் எக்ஸ்க்ளூசிவ் தகவலை உங்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம், உங்களை விழிப்புடன் வைத்திருக்க முடியும் என்று நம்புகிறோம். சிங்கப்பூரில் தான் skilled டெஸ்ட் நடக்குமா என்பது குறித்து சென்னையை சேர்ந்த நமது ஆய்வில் சிறந்த இன்ஸ்ட்யூட்டாக தேர்வான RK Singapore (BCA) Skilled Training & Testing Centreல் இதுகுறித்து பேசி இருந்தோம்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் உங்கள் Work Permit-ஐ Transfer செய்யணுமா? நீங்க இந்த sectorல வேலை செஞ்சா இதை follow பண்ணுங்க… அடுத்த கம்பெனிக்கு ஈசியாக தாவிடலாம்!

அந்த நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறியிருந்த தகவல் தமிழ் சாகா வாசகர்கள் உங்களுக்காக.

| அவர் கூறுகையில், “தற்போதுள்ள சூழலில் Skilled test சிங்கப்பூரில் மாற்ற பேச்சுவார்த்தைகள் நடந்தது என்னவோ உண்மை தான். இருந்தும் அது ஊழியர்களுக்கு பெரிய பயத்தினை கொடுக்கும் என சில மாற்று கருத்துக்கள் எழுந்தன. இதனை கருத்தில் கொண்டு அடுத்து மூன்று மாதங்களுக்கு, அதாவது மார்ச் மாதம் வரை இதில் எந்த மாற்றத்தினையும் செய்ய வேண்டாம் என அரசு தரப்பில் முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

மார்ச் மாதம் வரை டெஸ்ட் குறித்த நடைமுறைகள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கும். அதன்பிறகு கூட மொத்தமாக சிங்கப்பூருக்கு டெஸ்ட் நடைமுறைகளை மாற்றுவதற்கு வாய்ப்பில்லை. சில துறைகளுக்கு மட்டும் இந்த விலக்கு இருக்கும். அதுமட்டுமல்லாமல் வரும் மார்ச் மாதத்தில் கம்பெனிகளுக்கு ஊழியர்கள் தேவைப்படும் பட்சத்தில் கோட்டாவின் அளவினை அதிகரிப்பார்கள்” என்றும் தெரிவித்து இருக்கிறார். |

இதனால் டெஸ்ட் அடிக்க சென்றால் வேலை கிடைக்குமா என பயந்து கொண்டிருந்த பல இளைஞர்களுக்கு இது ஒரு இனிப்பான செய்தியாக இருக்கும் என நினைக்கிறோம்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts