TamilSaaga

அசிங்கம்.. அருவருப்பு! – சிங்கப்பூரில் வேலைக்கு அப்ளை செய்த பெண்கள் பற்றி.. பிரபல நிறுவன ஊழியர்களின் அப்பட்டமான செக்ஸ் emails – கூண்டோடு சிக்கிய ஆதாரம்

நீங்கள் ஒரு வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, உங்கள் கடந்தகால வேலை அனுபவம், உங்கள் தனித்துவம் மற்றும் நீங்கள் உருவாக்கிய வேலையின் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் நீங்கள் தீர்மானிக்கப்படுவீர்கள். அதாவது, ஒரு புதிய நிறுவனத்தில் வேலைக்கு தேர்வு செய்யப்படுவீர்கள்.

ஆனால், உங்களைப் பணியில் அமர்த்தும் நபர்கள் உங்களைப் பற்றி தேவையற்ற அல்லது பாலியல் கருத்துகளை வெளியிட்டால்….? அதுதான் தற்போது சிங்கப்பூரில் அரங்கேறி உள்ளது.

ஆம்! சிங்கப்பூரை தளமாகக் கொண்ட நிறுவனமான ETHOZ குழுமத்தில் வேலைக்காக விண்ணப்பித்த குறைந்தது ஆறு பெண்களுக்கு இப்படி நடந்திருப்பது தெரிய வருவதாக Mothership தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நிறுவனமான ETHOZ குழுமத்தில் வேலைப்பார்க்கும் ஆண் ஊழியர்கள், அங்கு வேலைக்கு விண்ணப்பித்திருந்த சில பெண்களின் உடல் தோற்றத்தைப் பற்றி பாலியல் ரீதியாகத் தூண்டும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டது போன்ற ஸ்க்ரீன் ஷாட்ஸ்-கள் தற்போது வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க – சிங்கப்பூர்.. பலத்த மழையிலும் பயணிகளை நனையவிடவில்லை : நீங்க Great சார் – பஸ் கேப்டனுக்கு Salute அடிக்கும் சிங்கப்பூர் வாசிகள்

சிங்கப்பூரின் ETHOZ குழுமம் ஒரு “integrated automotive and financing solutions” நிறுவனமாகும்.

இந்நிலையில், இந்த வக்கிர பாலியல் ரீதியாக கருத்துக்கள் குறித்த மின்னஞ்சல்களின் ஸ்கிரீன் ஷாட்களில், ஆண்களின் பெயர்கள் திருத்தப்பட்டு, பிப்ரவரி 7 அன்று Wake Up Singapore இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

அதுமட்டுமின்றி, வேக் அப் சிங்கப்பூர் இணையதளம் Mothership இணையதளத்துக்கு ஸ்கிரீன் ஷாட்களின் சென்சார் செய்யப்படாத பிரதிகளை வழங்கியது.

அதில், ETHOZ குழுமத்தின் சில வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பித்த பெண்களைப் பற்றி ஊழியர்கள் விவாதித்துள்ளனர். ஆனால் மின்னஞ்சல் ஸ்கிரீன் ஷாட்களில் காட்டப்பட்டுள்ள உரையாடல்கள் அவர்களின் தொழில்முறைத் தகுதிகளை மையமாகக் கொண்டிருக்கவில்லை. அதாவது, அந்த பெண்கள் விண்ணப்பித்திருக்கும் வேலை குறித்தோ அல்லது அது தொடர்பான விவரங்கள் குறித்தோ எந்த உரையாடல்களும் இடம்பெறவில்லை.

பல மின்னஞ்சல்களில் விண்ணப்பித்திருந்த பெண்களின் தோற்றம் குறித்த கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளன. அவற்றில் சில நல்லவையாகவும், சில எதிர்மறையாகவும் உள்ளன.

மற்றொரு மின்னஞ்சலில், அந்நிறுவனத்தின் ஒரு ஊழியர் விண்ணப்பம் செய்திருந்த பெண்ணின் புகைப்படத்தை “மசாஜ் பெண்ணுடன்” ஒப்பிட்டுள்ளார்.

பாலியல் கருத்துகள்

ஸ்கிரீன் ஷாட்களில்,வேலைக்கு விண்ணப்பம் செய்திருந்த பெண்களுடன் உடலுறவு கொள்வதைக் குறிக்கும் வகையில் பல ஊழியர்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

மற்றொரு மின்னஞ்சல் பரிமாற்றத்தில், ஒரு குறிப்பிட்ட பெண்ணை தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வீட்டிற்கு அழைத்து வரலாம் என்றும் பகிர்ந்துள்ளனர்.

மற்றொரு ஸ்க்ரீன் ஷாட், Man A, Man C (இது ஊழியர்களை குறிக்கிறது) க்கு மின்னஞ்சல் அனுப்பியதை காட்டுகிறது. அதில் அவர், “ஒரு இளமையாக இருக்கும் ஒரு வொர்க்ஷாப் நிர்வாகியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம், அதனால் மெக்கானிக் அவளைப் பார்க்கும்போது, அவர்கள் “அதிக ஆற்றல் [மற்றும்] சக்தியைப் பெற முடியும்… முடியும்… வேகமாக வேலை செய்ய முடியும்” என்று பாலியல் ஆசையை தூண்டும் அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளனர்.

அதற்கு, மேன் சி, “இளம் மற்றும் அழகானவர்” “நல்லவர்” என்று பதிலளித்தார், மேலும் அவர் “எனது ஆற்றலை உருவாக்க விரைவில் தனிப்பட்ட உபயோகத்திற்காக (sic) அவளை வீட்டிற்கு அழைத்து வருவேன், மேலும் எனது நீண்ட கால ஆற்றலைக் காட்டுவேன். . lol “. என்று கூறியுள்ளார்.

அதற்கு, மேன் சி, “அந்த இளம் மற்றும் அழகான பெண் அருமை” என்று பதிலளிக்கிறார். மேலும் அவர் “எனது ஆற்றலை உருவாக்க விரைவில் தனிப்பட்ட உபயோகத்திற்காக (sic) அவளை வீட்டிற்கு அழைத்து வருவேன், மேலும் எனது நீண்ட கால ஆற்றலைக் காட்டுவேன். . lol “. என்று அப்பட்டமான செக்ஸ் விவாதங்களை நடத்தியிருக்கின்றனர்.

இந்த விஷயத்தில் மதர்ஷிப்பின் கேள்விகளுக்குப் பதிலளித்த ETHOZ குழுமத்தின் மனிதவள மேலாளர் ஆல்வின் தாம், “இந்த ஸ்க்ரீன் ஷாட்ஸ்கள் அனைத்தும் எங்கள் வாகன பழுதுபார்க்கும் பணிமனைகளில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர்களால் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.”

“நாங்கள் இந்த பிரச்னையை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம், எங்கள் பணியிடத்தில் இதுபோன்ற நடத்தைகளை நாங்கள் மன்னிக்க மாட்டோம். நாங்கள் முழு விசாரணையை மேற்கொள்வதற்கும், பொருத்தமான ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கும் உத்தேசித்துள்ளோம்” என்றார்.

ஸ்கிரீன்ஷாட்களில் பெயர்கள் காட்டப்பட்ட நபர்கள் உண்மையில் ETHOZ குழுமத்தின் பணியாளர்களா? மற்றும் அவர்கள் இன்னும் அந்த நிறுவனத்தில் பணியாற்றுகிறார்களா? என்ற மதர்ஷிப் கேள்விக்கு ETHOZ குழுமத்தின் மனிதவள மேலாளர் இதுவரை பதில் அளிக்கவில்லை. மதர்ஷிப் இதற்கான அப்டேட் கொடுத்தவுடன், தமிழ் சாகாவிலும் செய்தியாக அத்தனையும் வெளியிடுகிறோம்.

Content and All Image Source: Mothership

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts