விமானத்தில் மேல் சட்டை மற்றும் முகத்தில் மாஸ்க் இல்லாத இரண்டு ஆண்கள், மற்றும் விமானப் பணிப்பெண் சீருடையில் இருக்கும் ஒரு பெண் ஆகிய மூவரின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதுகுறித்து கடுமையாக விசாரிக்க சிங்கப்பூரை சேர்ந்த Scoot விமான சேவை நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. சுமார் 15 வினாடிகள் நீளம் கொண்ட இந்த வீடியோ, விமானத்தில் படமாக்கப்பட்டது போல் தெரிகிறது, மேலும் 10க்கும் மேற்பட்ட சிறிய மதுபாட்டில்கள் இருக்கை தட்டு மேசையில் உள்ளது.
விமானத்தின் கேபின் குழுவினர் அணிந்திருந்த சீருடை போன்ற தோற்றத்தில் இருக்கும் அந்தப் பெண், Disposable கையுறைகள், முகக் கவசம் மற்றும் முகமூடி அணிந்திருப்பதைக் அந்த காணொளியில் காணலாம். மேலும் அந்த வீடியோவில் மது பாட்டில் ஒன்றை கையில் வைத்துக்கொண்டு, ஒரு கப்பில் மது அருந்தும் ஒரு ஆணும் அவர் அருகில் நடமாடிய நிலையில் ஒரு ஆணும் இருந்த நிலையில் அந்த பெண் அவர்களை அமைதியாக இருக்கும்படி சமிக்ஞை செய்யும் நிகழ்வும் அந்த காணொளியில் உள்ளது. மற்றொரு காட்சியில், பல வெற்று மது பாட்டில்கள் மற்றும் கோப்பைகள் ஒரு தட்டு மேசையில் காணப்படுகின்றன.
இதுகுறித்து தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஸ்கூட்டின் செய்தித் தொடர்பாளர் கூறினார். “பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை ஸ்கூட் மிக முக்கியத்துவத்துடன் நடத்துகிறது. சமூக ஊடகங்களில் எடிட் செய்யப்பட்ட வீடியோவை பதிவேற்றியிருப்பதை நாங்கள் அறிவோம், மேலும் உண்மைகளைக் கண்டறிய விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார் அவர்.
சீன மொழி செய்தித்தாள் ஷின் மின் டெய்லி நியூஸ் கூறுகையில், இந்த வீடியோ சில நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் பரவியது என்றும். அந்த வீடியோவில் விமானத்தில் இருந்த வேறு யாரையும் காட்டவில்லை, அது எங்கு எடுக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றது.