TamilSaaga
heatwave in singapore

சிங்கப்பூரில் அபாயகரமான வெப்ப அலை வீசும்…. என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை!!! மக்கள் தவிப்பு

Heatwaves in Singapore: சிங்கப்பூர் போன்ற ஒரு நகர மாநிலமும் பருவநிலை மாற்றத்தின் கோரப் பிடியில் சிக்கிக்கொண்டுள்ளது என்பது மிகவும் கவலைக்குரிய விஷயம். 2024ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் வழக்கத்தை விட 122 நாட்கள் அதிகமாக வெப்ப அலை வீசியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிக வெப்பம் மக்களின் உடல்நலம், சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை பாதிக்கிறது. பருவநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயர்வதால், கடற்கரையோரப் பகுதிகள் வெள்ளத்தின் அபாயத்தில் உள்ளன. சிங்கப்பூர் போன்ற தீவு நாடுகளுக்கு இது மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.

பருவநிலை மாற்றமில்லாது, ஓராண்டில் ஏறத்தாழ நான்கு நாள்களில் மட்டுமே இந்நிலை ஏற்படும் என்று டிசம்பர் 27ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

வோர்ல்டு வெதர் அட்ரிபியூஷன் மற்றும் கிலைமட் சென்ட்ரல்” எனும் அமைப்பு நடத்திய ஆய்வின்படி, சிங்கப்பூரில் ஏற்பட்டுள்ள வெப்ப அலைகள் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெப்ப அலைகள் இயற்கையாக நிகழக்கூடியவை. ஆனால் பருவநிலை மாற்றம் அவற்றை மேலும் மோசமாக்குகிறது.

புதைபடிவ எரிபொருள்கள் (கரி, பெட்ரோல், இயற்கை எரிவாயு போன்றவை) எரிக்கப்படும் போது, கார்பன் டை ஆக்சைடு (CO2) போன்ற பசுமை இல்ல வாயுக்கள் வளிமண்டலத்தில் வெளியாகின்றன. இந்த வாயுக்கள் சூரிய ஒளியைப் பிடித்துக்கொண்டு பூமியின் வெப்பத்தை வெளியேற விடாமல் தடுக்கின்றன. இதன் விளைவாக, பூமியின் வெப்பநிலை அதிகரித்து, காலநிலை மாற்றம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வு “புவி வெப்பமடைதல்” என்று அழைக்கப்படுகிறது.

220 நாடுகளின் வெப்பநிலைத் தரவுகள் பயன்படுத்தப்பட்டன. இந்த தரவுகளை ஆய்வு செய்ததன் மூலம், பல்வேறு நாடுகளில் வெப்பநிலை எவ்வாறு மாறி வருகிறது என்பதை துல்லியமாக அறிய முடிந்தது. மேலும், இந்த வெப்பநிலை மாற்றத்திற்கு புதைபடிவ எரிபொருள் பயன்பாடு எந்த அளவு காரணம் என்பதை துல்லியமாக கணக்கிட முடிந்தது.

சிங்கப்பூருக்கென்றே தனித்துவம்வாய்ந்த பருவநிலை உள்ளது. எனவே, உலகளாவிய நிலையில் வெப்பநிலை அதிகரித்துள்ளதை மற்ற நாடுகளைவிட சிங்கப்பூரின் வானிலை தெளிவாகக் காட்டுகிறது,” என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கிலைமட் சென்டரலின் இணை ஆய்வாளர் ஜோசஃப் கிகுவேரே தெரிவித்தார்.

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

சிங்கப்பூரில் அதிகமான வெப்பநிலை நிகழ்வுகள் அதிகரிக்கக்கூடும் என்பதால், பொதுமக்களுக்கு முன்கூட்டிய எச்சரிக்கை வழங்குவதில் தேசிய சுற்றுப்புற வாரியம் (NEA) முக்கியப் பங்கு வகிக்கிறது. 33 டிகிரிகள் செல்சியஸ்க்கு மேல் வெப்பநிலை பதிவாகும் நாட்களில், வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்து உடல் சுகாதாரத்தை பாதுகாக்கவும், நீர் அடிக்கடி பருகவும், வெப்பநிலை காரணமாக ஏற்படும் சூரியக் கொடுப்போக்கையும் வெப்பசலனத்தையும் தவிர்க்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

2024ஆம் ஆண்டுதான் ஆக வெப்பமான ஆண்டு என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகளாவிய சராசரி வெப்பநிலை முதன்முறையாக 1.5 டிகிரிகள் செல்சியஸ் எல்லையை கடந்துள்ளது என்பது பருவநிலை மாற்றத்தின் தீவிரத்தையும் அதன் தீம்பலன்களையும் பிரதிபலிக்கிறது.

சிங்கப்பூர் போன்ற நவீன நகரமும் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டியிருப்பது ஒரு எச்சரிக்கை மணி. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், எதிர்காலத்தில் மிகவும் கடினமான சூழலை எதிர்கொள்ள நேரிடும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

Related posts