TamilSaaga

எல்லாம் ரெடி.. “சிங்கப்பூரில் நாளை முதல் குழந்தைகளுக்கு பெருந்தொற்று தடுப்பூசி” – கல்வி அமைச்சர்

சிங்கப்பூரில் நாளை முதல் 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு Covid 19 தடுப்பூசி போடப்படவுள்ளது. இதனையடுத்து Primary 4 முதல் 6 வரை பயிலும் மாணவர்களுக்கான கோவிட்-19 தடுப்பூசி பதிவு விகிதம் 40 சதவீதத்தைத் தாண்டியுள்ளது என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் இன்று ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 26) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். நாளை குழந்தைகளுக்கான தடுப்பூசி மையங்கள் நாடு முழுவதும் படிப்படியாகத் திறக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக, Senja-Cashew சமூகக் கழகத்தில் திரு சான் பேசினார்.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூர் River Valley சாலையில் உள்ள பாரில் புதிய Omicron தொற்று குழுமம்

நாளை திங்கட்கிழமை திறக்கப்படும் ஏழு குழந்தைகளுக்கான தடுப்பூசி மையங்களில் Senja-Cashew சமூகக் கழகமும் ஒன்றாகும். அதேபோல மேலும் ஏழு நிலையங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 3ம் தேதி முதல் தங்களுடைய செயல்பாடுகளை துவங்கும். தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி பெற வார நாட்களில் பதிவு செய்யுமாறு பெற்றோரை ஊக்குவித்தார் அமைச்சர். மேலும் அத்தகைய மாணவர்களுக்கு மருத்துவ விடுப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அதே நேரத்தில் இந்த தடுப்பூசி பெறுவதற்கான “Slot-கள்” எதிர்வரும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளுக்கு முடிந்துவிட்டதாகவும். ஆகையால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கான தடுப்பூசிகளை பெற, வார நாட்களில் Slot புக் செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். வார நாட்களில் Slotகள் அதிக அளவில் இருப்பதாகவும், இதனால் பிள்ளைகளின் பள்ளி வகுப்புகள் பாதிக்கப்படுமோ என்றும் அவர்களுக்கு விடுப்பு எடுப்பதால் பிரச்சனை வருமோ என்றும் எந்த பெற்றோர் கவலைகொள்ளவேண்டாம் என்றார் அவர்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளும் குழந்தைகளுக்கு உரிய ஓய்வு வழங்கப்படும் என்றும், அந்த நாளில் அவர்கள் தவறவிடும் பாடங்கள் குறித்தும் பள்ளிகள் கவனித்துக்கொள்ளும் என்றும் அமைச்சர் கூறினார். தடுப்பூசி போட்ட இரண்டு வாரங்களுக்கு பிள்ளைகளுக்கு கடுமையான வேலைகள் எதுவும் கொடுக்காமல் இருக்கவும் பள்ளிகள் தயார்நிலையில் இருப்பதாக அவர் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts