சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான இணைய பாதுகாப்பு பயிற்சி வகுப்புகள் விரைவில் துவங்க உள்ளன. அனைத்து நாடுகளையும் சேர்ந்த தொழிலாளர்கள் நிச்சயம் இந்த பயிற்சி வகுப்புகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
Project MiLove என்ற இயக்கத்தின் மூலம் இணையப் பாதுகாப்புப் பயிற்சி வகுப்புகள் உங்களுக்கு அளிக்கப்படும் என்று சிங்கப்பூரில் இயங்கி வரும் ItsRainingraincoats என்ற அமைப்பு தனது முகநூல் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியர்களை குறிவைத்து பல மோசடிகள் நடந்து வருகின்றது. சிங்கப்பூர் மனிதவள அமைச்சகமும் மோசடிகளில் இருந்து எப்படி ஊழியர்கள் தப்பிப்பது மற்றும் தங்களை தற்காத்துக்கொள்வது என்பதை அவ்வப்போது விளக்கி வருகின்றது.
இந்நிலையில் Project MiLove என்ற இயக்கத்தின் கீழ் சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஊழியகர்ளுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் இந்த பயிற்சி வகுப்புகள் மாண்டரின், ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய மூன்று முக்கிய மொழிகளில் வழங்கப்படவுள்ளது
30 மற்றும் 31 July (சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில்) – Mandarin மொழியில் வகுப்புகள் நடக்கும்
6 ஆகஸ்ட் (சனிக்கிழமை) – ஆங்கிலத்தில் நடைபெறும்
7 ஆகஸ்ட் (ஞாயிற்று கிழமை) – தமிழ் மொழியில் நடைபெறும்
20 ஆகஸ்ட் (சனிக்கிழமை) – தமிழ் மொழியில் நடைபெறும்
21 ஆகஸ்ட் (ஞாயிறு) – ஆங்கிலத்தில் நடைபெறும்
ஃபிஷிங் மோசடிகள் என்றால் என்ன?
ஃபிஷிங் மோசடிகளைத் தவிர்ப்பது எப்படி.
ஃபிஷிங் மோசடிகளில் இருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது
உள்ளிட்ட மூன்று தலைப்புகளில் வகுப்புகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சேவைக்கு கட்டணம் உண்டா? அல்லது இல்லையா? என்பது குறித்து தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.