TamilSaaga

“உப்பிட்ட சிங்கப்பூர் மண்ணில் எக்கச்சக்கமாய் எகிறும் உப்பின் பயன்பாடு” – அதிகரிக்கும் Blood Pressure பாதிப்புகள் – அமைச்சர் ஓங் கவலை

சிங்கப்பூரில் இன்று (மார்ச்.9) நடந்த சுகாதார அமைச்சக பட்ஜெட் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் Ong Ye Kung, சிங்கப்பூரர்கள் அளவுக்கு அதிகமாக உப்பு எடுத்துக் கொள்வதால், அதனை தடுக்க நடிவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “சிங்கப்பூர் இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் வயது வித்தியாசமின்றி ஆரோக்கியம் குறைவாகவே உள்ளனர். உதாரணமாக, 2017 இல், 10 பேரில் இருவருக்கு (21.9 சதவீதம்) உயர் இரத்த அழுத்தம் இருந்தது. 2020 ஆம் ஆண்டில், இது 10 இல் மூன்று (31.7 சதவீதம்) என்று உயர்ந்துள்ளது” என்று அமைச்சர் ஓங் கூறியுள்ளார்.

கணிசமான எண்ணிக்கையில் 18 முதல் 74 வயதுடைய சிங்கப்பூரர்களில் மூன்றில் ஒருவருக்கு 2019 மற்றும் 2020-க்கு இடையில் உயர் இரத்த அழுத்தம் இருந்தது.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் லாரியில் பயணிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் – வரப்பிரசாதமாய் வரும் புதிய Rules!

சிங்கப்பூர் வாசிகள் உப்பை உட்கொள்வது உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கப்பட்ட வரம்பான 2,000mg சோடியத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும். சிங்கப்பூரர்கள் 2018 இல் சராசரியாக ஒரு நாளைக்கு 3,600mg சோடியம் – அல்லது 1.5 டீஸ்பூனுக்கும் அதிகமாக உப்புக்கு உட்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்துப் போராட, HPB (Health Promotion Board) இந்த சோடியம் அளவைக் கட்டுப்படுத்த புதிய வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

முதலாவதாக, HPB உப்பு சப்ளையர்கள் மற்றும் உணவு சேவைத் துறையுடன் இணைந்து ஆரோக்கியமான மூலப்பொருள் மேம்பாட்டுத் திட்டம் (HIDS) மூலம், சமையலில் பயன்படுத்தப்படும் வழக்கமான உப்புக்கு பதிலாக குறைந்த சோடியம் உப்பு பயன்படுத்துவதை ஊக்குவிக்கும்.

மேலும் படிக்க – திரும்புன பக்கமெல்லாம் வாந்தி, பேதி… கண்ணிமைக்கும் நேரத்தில் உயிர் பலி.. 1873-ல் சிங்கப்பூரை கலங்கடித்த இன்னொரு “பெருந்தொற்று” வரலாறு தெரியுமா?

மேலும், சிங்கப்பூரர்கள் குறைந்த உப்பை உண்பதை ஊக்குவிக்க நாடு தழுவிய பிரச்சாரத்தை HPB மேற்கொள்ளும்.

இந்த பிரச்சாரம் அதிக உப்பை உட்கொள்வதால் ஏற்படும் ஆபத்துகளை விளம்பரப்படுத்தும். உப்புக்கு மாற்றானவை பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும். மேலும், குறைந்த உப்பைப் பயன்படுத்தும் போதும் உணவை சுவையாக மாற்ற மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான உதவிக்குறிப்புகளையும் HPB வழங்கவுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts