TamilSaaga

“வெறும் 15 நிமிடத்தில் Result கிடைக்கும்” : சிங்கப்பூர் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட உமிழ்நீர் ART கருவி

சிங்கப்பூரில் இங்குள்ள நமது விஞ்ஞானிகள் உமிழ்நீர் ஆன்டிஜென் ரேபிட் சோதனையை (ART) உருவாக்கியுள்ளனர். இது பொதுவான பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை (PCR) சோதனையைப் போலவே துல்லியமானது என்று கூறப்படுகிறது. அதேபோல இந்த கருவி மூலம் பெருந்தொற்றைக் கண்டறிய சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் குறையும் தொற்று சுய-பரிசோதனை கருவியின் விலை

இந்த சுயமாக நிர்வகிக்கப்படும் சோதனையானது 97 சதவீத துல்லிய விகிதத்தைக் கொண்டுள்ளது மற்றும் Omicron உட்பட பல்வேறு பெருந்தொற்று வைரஸ் வகைகளைக் கண்டறிய முடியும் என்றும் கூறப்படுகிறது. கூடுதல் சிறப்பாக இந்த டெஸ்ட் கிட் இன்னும் மூன்று மாதங்களில் சந்தைக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Parallel Amplified Saliva Rapid POint-of-caRe டெஸ்ட் (Pasport) எனப்படும் இந்த சோதனையின் முடிவுகளைப் பெறுவதற்கு 15 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் தேவைப்படும். இது தற்போதைய ART-களுக்குத் தேவைப்படும் குறுகிய நேரத்தைப் போன்றது. அதே நேரத்தில் PCR சோதனைகளுக்கு, அதன் முடிவுகளைப் பெற சில மணிநேரங்கள் முதல் மூன்று நாட்கள் வரை ஆகும் என்பது நாம் அறிந்ததே. மேலும் Pasport சோதனை குறித்து டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளி, சிங்கப்பூர் பொது மருத்துவமனை (SGH), சிங்கப்பூர் தேசிய புற்றுநோய் மையம் (NCCS) மற்றும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (NUS) ஆகியவற்றின் ஆராய்ச்சி ஒத்துழைப்பின் விளைவாக இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

டியூக்-என்யுஎஸ் மற்றும் சிங்ஹெல்த் ஆகியவை மருத்துவ விநியோக நிறுவனமான டிஜிட்டல் லைஃப் லைனுடன் இந்த சோதனை கருவியின் வணிகமயமாக்கலுக்கான உரிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக SGH-ல் உள்ள தொற்று நோய்கள் துறையின் மருத்துவ அதிகாரியும், சோதனையின் பின்னணியில் உள்ள முன்னணி கண்டுபிடிப்பாளருமான டாக்டர் டேனி டிஎன்ஜி கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts