TamilSaaga

“சிங்கப்பூர் துவாஸ் தெற்கு தெருவில் பரவிய தீ” : 1 மணிநேரம் போராடி அணைத்த 50 தீயணைப்பு வீரர்கள்

சிங்கப்பூரில் 3A துவாஸ் தெற்கு தெரு 15-ல் இன்று (டிசம்பர் 9) நள்ளிரவு 12.05 மணியளவில், சிங்கப்பூர் குடிமை பாதுகாப்பு துறைக்கு மேற்குறிப்பிட்ட பகுதியில் இருந்து தீ விபத்து குறித்து அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்று SCDF படை நிகழ்விடத்திற்கு உடனடியாக விரைந்தது. அங்கு வந்தவுடன், 20 மீட்டர் மற்றும் 5 மீட்டர் உயரம் கொண்ட ஒரு பெரிய குப்பைக் குவியலை உள்ளடக்கிய தீயை சுற்றி வளைத்து அதனை அணைக்கும் பணியில் SCDF படை உடனடியாக இறங்கியது.

இதையும் படியுங்கள் : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா

புகை மண்டலம் சூழ்ந்த அந்த சூழலில் செல்ல தீயணைப்பு வீரர்கள் சுவாசக் கருவிகளை அணிய வேண்டியிருந்தது. பாதுகாப்பு படை நிகழ்விடத்திற்கு வந்த ஒரு மணி நேரத்தில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்று SCDF வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்காக மொத்தம் 50 தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஒரு ஆளில்லா தீயணைப்பு இயந்திரம் (UFM), ஏழு நீர் ஜெட் கருவிகள் மற்றும் சுருக்கப்பட்ட காற்று நுரை ஆகியவை தீயைக் குறைக்க பயன்படுத்தப்பட்டன. வளாகத்தை காற்றோட்டம் செய்ய UFM பயன்படுத்தப்பட்டது.

*Damping down என்பது நெருப்பை அணைத்த உடனேயே ஈரமான எரிந்த மேற்பரப்பில் தண்ணீரைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. இது வெப்பமான எரிந்த பரப்புகளில் இருந்து தீ மீண்டும் எழுவதைத் தடுக்கும். மேலும் இந்த விபத்து குறித்து ஆய்வு நடந்து வருகின்றது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts