சிங்கப்பூரில் தடுப்பூசி பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சிகளை மருத்துவ நிபுணர் ஆய்வுக்குழு மேற்கொண்டு அது தொடர்பான சில பரிந்துரைகளை செய்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
mRNA தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பிறகு மிதமான அளவிலான ஒவ்வாமை போன்ற பாதிப்பு ஏற்பட்டவர்கள் இனி தங்களது இரண்டாவது தவணை தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ளலாம் என அந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் தடுப்பூசியை போட்டுக்கொண்ட ஒரு வாரத்துக்கு பதிலாக இரண்டு வாரங்களுக்கு அதிக எடை தூக்குவது போன்ற உடற்பயிற்சிகளை செய்ய வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மாரடைப்பு மற்றும் இதயத்தை சுற்றி காணப்படும் சவ்வுகளில் அழற்சி ஏற்படும் அபாயம் உள்ளதாக உலகளவில் ஆராய்ச்சிகள் கூறுவதாகவும் அதிலும் இளையோர்களுக்கு இது அதிகம் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் அழற்சி அறிகுறிகளை பெருவதாக கூறப்பட்டுள்ளது.
mRNA தடுப்பூசி போட்ட பிறகு மிதமான தோல் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அடுத்த தவணை தடுப்பூசி போட தகுதியை பெறாதவர்கள் இனி போட்டுக்கொள்ள முடியும் எனவும் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.