TamilSaaga

மூடப்பட்டது “தி ஆன்லைன் சிட்டிசன்” தளம் – தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டு ஆணையம் நடவடிக்கை

சிங்கப்பூரில் தீ ஆன்லைன் சிட்டிசன் தளத்தின் யூடூப், முகநூல், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற வை முடக்கப்பட்டுள்ளன மற்றும் தனியார் பார்வைக்கு மாற்றப்பட்டுள்ளன.

தி ஆன்லை சிட்டிசன் ஒரு சமூக அரசியல் தளமாகும். இதனை நேற்று மதியம் 3 மணிக்கு முடக்க வேண்டும் என்பது தகவல் தொழில்நுட்ப மேம்பாட்டு ஆணையத்தின் விதியாகும் ஆனால் அதற்கு மதிப்பளிக்கும் வகையில் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே அவர்கள் அதன் தளங்களை மூடினார்கள்.

தளத்தின் செயல்பாட்டிற்கான நிதி ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்ற சட்ட நடைமுறை இருக்கும் சூழலில் பல முறை அந்த தளம் அதனை செய்ய தவறியதால் முடக்க உத்தரவிடப்பட்டது. மேலும் இணைய தளத்தின் உரிமத்தை ரத்து செய்தது.

ஏற்கனவே செப்டம்பர் 1ம் தேதி பிரதமரை அவதூறு செய்தமைக்காக அந்த தளத்தின் ஆசிரியர் டெரி ஸீ விற்கு $210,000 இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு நிதி திரட்டுவதாகவும் $195,000 திரட்டிவிட்டதாகவும் அவரது வழக்கறிஞர் லிம் தியேன் தெரிவித்துள்ளார்.

Related posts