சிங்கப்பூரை பொறுத்தவரை அவற்றின் தனித்துவமான மஞ்சள் நிற முகத்தின் மூலம் அடையாளம் காணக்கூடியது தான் புள்ளிகள் கொண்ட மர ஆந்தைகள். உள்ளூர் பறவை ஆர்வலர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் மத்தியில் அண்மை காலமாக அவை பிரபலமாகிவிட்டன. இந்நிலையில் காதலர் வரும் பிப்ரவரி 14ம் தேதி வரவிருக்கும் காதலர் தினத்தை முன்னிட்டு சிங்கப்பூரின் பாசிர் ரிஸ் பூங்காவில் உள்ள புள்ளிகள் கொண்ட மர ஆந்தைகள் ஒன்றோடு ஒன்று கொஞ்சிக்கொண்டு பாசம் காட்டும் படங்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றன.
புகைப்படக் கலைஞர் இஸ்மாயில் ஜாஸ்மின், கடந்த பிப்ரவரி 7ம் தேதி பறவைகளுக்கான முகநூல் குழுவில் தனது படங்களைப் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் இரண்டு காதல் பறவைகள் மூடிய கண்களுடன் கன்னத்தை வருடும் காட்சி பதிவாகியிருந்தது. அதே போல அவர் வெளியிட்ட வேறு ஒரு புகைப்படத்தில் அவை இரண்டும் நேருக்குநேர் நின்று தங்கள் முகங்களை வருடிக்கொண்டன.
அதேபோல புகைப்படக் கலைஞர் இஸ்மாயில் ஜாஸ்மின் வெளியிட்ட மூன்றாவது படத்தின் கோணம், ஒரு கண்ணை ஒரு ஆந்தை திறந்திருக்க மற்றொன்று அதை வருடுவது போல இருந்தது. Preening மற்றும் கன்னத்தில் தேய்த்தல் ஆகியவை ஆந்தைகளில் காதல் மற்றும் ஜோடி பிணைப்புடன் தொடர்புடைய நடத்தைகள் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர். பிரீனிங் என்பது பறவைகள் தங்கள் அலகால் வருடி தன்னையோ அல்லது தனது துணையையோ சுத்தம் செய்வது என்று பொருள்.
இதே ஆந்தைகளை வேறுஒரு கோணத்தில் படமெடுத்த மற்றொரு புகைப்படக் கலைஞரான லோ ஃபிரான்கி Singapore Wildlife Sightings என்ற குழுவில் தனது படங்களைப் பகிர்ந்துள்ளார். இஸ்மாயில் எடுத்த புகைப்படங்களில் இடது பக்கம் இருந்த ஆந்தை எவ்வளவு பாசமாக செயல்பட்டதோ லோ எடுத்த புகைப்படத்தில் அதே அளவிற்கு பாசத்தை வெளிப்படுத்தியது வலது பக்கத்தில் இருந்த ஆந்தை. இந்நிலையில் இஸ்மாயிலின் மற்றும் லோவின் இரண்டு பதிவுகளும் ஆந்தைகளின் பாசத்தை வெளிப்படுத்தும் படங்களாகவும், வரவிருக்கும் காதலர் தினத்தை நினைவூட்டும் விதமாகவும் உள்ளது என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.
உடலில் புள்ளிகள் கொண்ட மர ஆந்தை சிங்கப்பூரில் ஆபத்தான விலங்காக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த இனம் முதன்முதலில் சிங்கப்பூரில் டிசம்பர் 1985 இல் மத்திய நீர்ப்பிடிப்பு காடுகளில் காணப்பட்டது, அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1986 இல் இனப்பெருக்கம் செய்யப்பட்டது. புள்ளிகள் கொண்ட மர ஆந்தை வேறு பல இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது மற்றும் இந்த வகை ஆந்தைகள் 30க்கும் குறைவாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.