TamilSaaga

Big Breaking : “சிங்கப்பூர் உள்பட அனைத்து வெளிநாட்டு பயணிகள்” : கட்டுப்பாடுகளை தளர்த்தியது இந்தியா – எப்போது அமலாகிறது?, முழு விவரம்

நமது சிங்கப்பூர் மட்டுமில்லாமல் அண்டை நாடான இந்தியா உள்பட உலக அளவில் பல நாடுகளில் தொற்றின் அளவு கடந்த சில வாரங்களாகவே பெரிய அளவில் வீழ்ச்சியை கண்டு வருகின்றது. இது இந்த தொற்று நோயின் முடிவாக இருக்குமா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்றபோதும் பல நாட்டு அரசுகள் தொடர்ந்து வெளிநாட்டு பயணிகளுக்காக பல தளர்வுகளை தொடர்ந்து அறிவித்து வருகின்றன.

“சிங்கப்பூர் புகைப்பட கலைஞர்களின் கை வண்ணம்” : கொஞ்சி குலாவிய அறிய வகை ஆந்தைகள் – காதலர் தின கொண்டாட்டங்கள் துவக்கம்

இந்நிலையில் நமது அண்டை நாடான இந்தியாவிலும் தொற்றின் அளவு தொடர்ந்து குறைந்து வரும் இந்த நேரத்தில் அந்நாட்டு மத்திய அரசு வெளிநாட்டு பயணிகளுக்கு விதித்திருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. இது குறித்து அந்நாட்டு மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் “பிற நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் இனி 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளது”

“தொற்று அளவு குறைந்து வருவதால் விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையும் கட்டாயமல்ல என்றும் தெரிவித்துள்ளது. இருப்பினும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கள் உடல்நிலையை சுயமாக கண்காணிக்க அவர்கள் 14 நாட்களில் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது”

சிங்கப்பூரில் டாக்சியில் ஏறிய சில நிமிடங்களில் பிரசவ வலி.. மருத்துவர்கள் அரக்கப்பறக்க ஓடி வர வண்டியிலேயே பிறந்த குழந்தை – “என் அதிர்ஷ்டம்” என பூரித்த டிரைவர்

“மேலும் தற்போது உலக அளவில் தொற்று ரீதியாக ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இருந்த இந்தியா நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இந்தியா வரும் பயணிகள் பயன் நேரத்திற்கு 72 மணிநேரத்திற்கு முன் எடுக்கும் சோதனைக்கு பதிலாக இரண்டு தவணை தடுப்பூசி சான்றிதழை upload செய்தால்.போதுமானது” மேலும் இந்த தளர்வுகள் வரும் பிப்ரவரி 14ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts