TamilSaaga

சிங்கப்பூர் வர காத்திருக்கும் ராஜபக்ச? மாலத்தீவு மக்களுக்கு இலங்கை மக்கள் வைக்கும் கோரிக்கை என்ன? – இணையத்தில் வைரலாகும் தகவல்கள்

இலங்கையில் தற்போது நிலவு சூழல் அனைவரும் அறிந்ததே, இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) இலங்கைக்கான அனைத்து அத்தியாவசியமற்றப் பயணங்களையும் ஒத்திவைக்குமாறு சிங்கப்பூரர்களுக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் (MFA) அறிவுறுத்தியது.

இலங்கையில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ராஜினாமா செய்யுமாறு மக்கள் வலியுறுத்திய நிலையில் நமது சிங்கப்பூர் அரசு இந்த முடிவை எடுத்து என்பதும் குறிப்பிடத்தக்கது.

“இலங்கையில் இருக்கும் சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவும் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்றும் MFA தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஜனாதிபதி மாளிகை பொதுமக்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து தப்பிய ராஜபக் மாலத்தீவுகளுக்கு தப்பிச்சென்றுள்ளதாக NDTV என்ற பிரபல நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அங்கிருந்து அவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மூலம் சிங்கப்பூர் வர முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிங்கப்பூரின் தேசிய தினம்.. 5 இடங்களில் விண்ணைப் பிளக்கும் வாணவேடிக்கை – எல்லோருக்கும் அனுமதி உண்டா?

ஆனால் அவர் சிங்கப்பூருக்கு இன்னும் வரவில்லை என்றும், இன்னும் மாலத்தீவில் தான் அவரும் அவரதும் மனைவியும் உள்ளார்கள் என்றும் NDTV தெரிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் உள்ள மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

மாலத்தீவில் மக்கள் ராஜபக்ஷவிற்கு அடைக்கலம் தரக்கூடாது என்றும், அவர் ஒரு பயங்கரவாதி என்றும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts