TamilSaaga

2 வருடங்கள் வெளிநாடு ஊழியர்கள் பட்டபாடுக்கு கிடைத்த வெகுமதி… கண்ணீர் மல்க வரவேற்ற சாங்கி விமான நிலையம் – மார்ச் மாதம் புதிய “ரெக்கார்டு”

கடந்த இரு வருடங்களாக பெருந்தொற்று காரணமாக, உலகம் பட்டபாடு சொல்லி மாளாது. ஆயிரக்கணக்கானோருக்கு வேலை பறிபோனது. லட்சக்கணக்கானோருக்கு சம்பளம் பாதிக்கு பாதி குறைந்தது.

வாழ்க்கைத் தரம், கனவுகள், லோன், இஎம்ஐ என்று நடுத்தர மக்கள் தொடங்கி, அன்றாடம் நாலு காசு சம்பாதித்தால் தான் சோறு என்ற நிலைமையில் இருந்தோர் வரை அனைவரும் சொல்லிலடங்கா இன்னல்களை அனுபவிக்க நேர்ந்தது.

குறிப்பாக, இதில் பெரிதும் பாதிக்கப்பட்டது வெளிநாட்டு ஊழியர்கள் தான். எல்லைகள் மூடப்பட கிட்டத்தட்ட சிறை வாழ்ககை தான் அவர்களுக்கு. இதனால், பலர் மன உளைச்சலால் அவதிப்பட்டது உண்மை.

மேலும் படிக்க – சிங்கப்பூர் Seahill குடியிருப்பில் ‘கழிவறையில்’ இருந்து வெளியே வந்த ஜோடி.. வடிவேலு பாணியில் கையும் களவுமாக பிடித்த பாதுகாவலர் கணேசன் – இறுதியில் அவருக்கே ‘ஆப்பு’ வைத்த பேராசை!

இன்னும் பல ஊழியர்களோ, மீண்டும் வேலையில் சேர சிங்கப்பூர் திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர். இன்னமும், சிங்கப்பூர் திரும்ப முடியாமல் தான் இருக்கின்றனர்.

இந்த நிலையில், மெல்ல மெல்ல சூழல் தற்போது மாறி வருகிறது. எல்லைகள் திறக்கப்பட ஊழியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிங்கப்பூர் நுழைய முயற்சி செய்து வருகின்றனர். இந்த சூழலில், மார்ச் மாதத்தில் சாங்கி விமான நிலையத்தின் வழியாக சுமார் 1.14 மில்லியன் பயணிகள் பயணித்துள்ளது தெரிய வந்துள்ளது. இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெருந்தொற்று தொடக்கத்தில் எல்லைகள் மூடப்பட்டதில் இருந்து முதல் முறையாக ஒரு மில்லியனைத் தாண்டியுள்ளது.

நோய்த்தொற்றுக்கு முன் மார்ச் 2019 இல் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கையில், இது 20.3 சதவீதம் மட்டுமே. எனினும், அதேசமயம் இது ஒரு வருடத்திற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட போக்குவரத்தை விட கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகமாகும், இது சாங்கி விமான நிலையத்தில் பயணிகளின் புழக்கம் அதிகரித்து வருவதை குறிக்கிறது.

மேலும் படிக்க – “நல்ல பரோட்டா மாஸ்டரை 24 நாட்களாக தேடுகிறோம்”.. ஆஸ்திரேலியாவில் உள்ள மலேசிய உணவகம் வெளியிட்ட பதிவு – சம்பளம் 3 லட்சமாம்!

மார்ச் மாதத்தில் சாங்கி விமான நிலையத்தில் மொத்தம் 13,200 விமானங்கள் வந்து சென்றிருக்கிறது. இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட 62.2 சதவீதம் அதிகமாகும். சாங்கி விமான நிலையக் குழுமம் (CAG) நேற்று (ஏப்ரல் 21) மாலை அதன் மார்ச் மாத புள்ளிவிவரங்களை அறிவித்தது.

எப்படியோ.. கடந்த இரண்டு ஆண்டுகள் நிலவிய இக்கட்டான சூழலில் இருந்து சிங்கப்பூர் வெளியே வருகிறது. அதன் பிரதிபலிப்பே சாங்கி விமான நிலையத்தின் இந்த புள்ளிவிவரங்கள். கூடிய விரைவில், அனைத்து வெளிநாட்டு ஊழியர்களும் மீண்டும் சிங்கப்பூருக்கு தங்கள் வேலைக்கு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts