TamilSaaga

“எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கள் மேல் வைத்த நம்பிக்கைக்கு நன்றி” – அமைச்சர் Tan See Leng

சிங்கப்பூரில் தங்குமிடங்களில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சமூக மற்றும் பொழுதுபோக்கு மைய (RC) வருகை திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவோம் என்று சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் டான் சீ லெங் அறிவித்தார். இந்த திட்டத்தை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. 3 டிசம்பர் 2021 முதல், தடுப்பூசி போடப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 3,000 பேர் வரை சமூகத்தைப் பார்வையிட முடியும். தகுதியுடைய தொழிலாளர்கள் தங்களுக்கு விருப்பமான எந்த இடத்தையும் பார்வையிட முடியும், நிகழ்வுக்கு முந்தைய சோதனை போன்ற தேவையான பாதுகாப்புகளுடன் இது நிகழும் என்று அவர் கூறினார்.

இதையும் படியுங்கள் : சமூக வருகையில் சிங்கப்பூர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

இதுகுறித்து அவர் வெளியிட முகநூல் பதிவில் “சிங்கப்பூர் வாழ் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தினசரி RC-களைப் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள், ஒவ்வொரு வருகைக்கும் எட்டு மணிநேரம் வரை அவர்களுக்கு அவகாசம் வழங்கப்படும். சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் திரைப்படங்கள் மற்றும் விளையாட்டுகளின் திரையிடல் போன்ற பல்வேறு செயல்பாடுகளை அதிகரிக்க RC ஆபரேட்டர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது”.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

“எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர் தங்குமிடங்களில் இருந்த பின்னடைவை சீராக்கி வருவதால், வருகைத் திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். தங்குமிடங்களில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 98 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் இப்போது முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர். அதே போல தகுதியான தொழிலாளர்கள் அதிக வேகத்தில் பூஸ்டர் தடுப்பூசிகளை எடுத்து வருகின்றனர்.” “தங்குமிடங்களில் நோய்த்தொற்றுகளின் வீதமும் குறைந்துள்ளது, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் அறிகுறியற்றவர்களாக அல்லது லேசான அறிகுறிகளைக் கொண்டவர்களாக உள்ளனர்” என்றார் அவர்.

“எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எங்கள் மீது தொடர்ந்து வைத்த நம்பிக்கை மற்றும் பொறுமைக்காக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நாங்கள் தொடர்ந்து இயக்கக் கட்டுப்பாடுகளை பாதுகாப்பாகவும் படிப்படியாகவும் எளிதாக்குகிறோம். தங்குமிட ஆபரேட்டர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உட்பட எங்களின் பங்குதாரர்களுடன் இணைந்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பாதுகாப்புக்கான வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவோம்” என்றும் அவர் கூறினார்.

Related posts