TamilSaaga

சிங்கப்பூரில் வாழும் தமிழக வாலிபர்களே… உங்களுக்கு இந்தோனேசிய காதலி இருக்காங்களா? அப்போ இந்த செய்தி உங்களுக்குதான்.. உஷார் ரிப்போர்ட்!

சிங்கப்பூருக்கு பிழைப்புக்காக வெளிநாடுகளிலிருந்து வந்து சம்பாதிப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாகத் தமிழ் மொழியை அதிகம் பேர் பயன்படுத்தும் சிங்கப்பூர், தமிழர்களின் முதல் தேர்வாக அமைந்து விடுகிறது. இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தாலே நல்ல நிலைமையில் செட்டில் ஆகிவிடலாம் என்ற ஆசையில்தான் பலர் சிங்கப்பூரைத் தேர்வு செய்கிறார்கள்.

முதல் சில மாதங்கள் அவர்களின் எண்ணத்துக்கு ஏற்ப வேலைகளுக்கு சென்று வீட்டுக்குப் பணம் அனுப்புகிறார்கள். ஆனால், பிரச்னையே அதன்பிறகுதான் ஆரம்பமாகிறது என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அதன்பிறகு வீட்டுக்குப் பணம் அனுப்புவதை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்கிறார்களாம்.சிலர் ஒரு கட்டத்துக்கு மேல் பணமே அனுப்புவது இல்லை என்பதும் நடப்பதாகச் சொல்கிறார்கள்.

இதுகுறித்து விசாரித்து பார்க்கையில், இங்கு தான் பெரிய மோசடி மறைமுகமாக நடந்து வருவது தெரியவருகிறது. ஆண்களைப் போல பெண்களும் வேலைக்காக சிங்கப்பூர் வருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே சரியாக வேலை செய்ய, இன்னொரு தரப்பு பெண்கள் அதீத ஆசையால் குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பதை வழக்கமாக்கிக் கொள்கிறார்கள். இதுபோன்ற கிரைம்களில் அதிகம் ஈடுபடுவது இந்தோனேசியா பெண்கள்தான் என்கிறார்கள்.

மற்ற நாட்டு ஆண்களை விட தமிழக ஆண்கள் தான் இந்த மோசடியில் அதிகமாக சிக்கி வருகின்றனர். இந்தோனேசிய பெண்கள் அவர்களுடன் நட்பாக பேசி காதல் வலை விரிக்கிறார்கள். அவர்களோடு ஊர் சுற்றுவதையும் வாடிக்கையாக்கிக் கொள்கிறார்கள். வீட்வை விட்டு சிங்கப்பூர் வந்து அன்புக்காக ஏங்கித் தவிக்கும் தமிழ்நாட்டு ஆண்கள்தான் இவர்களின் மோசடி வலையில் அதிகம் சிக்குகிறார்கள். ஒரு கட்டத்தில் ஆண்களைத் தங்கள் மோக வலையில் சிக்க வைத்து விடுகின்றனர் இந்த பெண்கள். என்ன கேட்டாலும் செய்யலாம் என மன நிலைமைக்கு அவர்களைக் கொண்டுவந்த பிறகுதான், தங்களுடைய நாடகத்தையே தொடங்குகிறார்கள் இந்தோனேசிய பெண்கள். வீட்டில் பெரிய பிரச்சனை என்று தொடங்கி அம்மாவுக்கு ஆபரேஷன் போன்ற பொய்களை அள்ளி தெளித்து பண நெருக்கடியில் இருப்பதை சொல்லாமல் சொல்லிவிடுவார்களாம்.

இளகிய மனம் படைத்த நம்ம காதல் மன்னர்களோ, அடடா நமக்கு மனைவியா வரப்போறவங்கதானே என்கிற எண்ணத்தில் சம்பளம் வந்த முதல் நாளே மொத்தத்தை அவருக்கு கொடுத்து பிரச்சனையை சரி செய்ய சொல்வார். சம்பளம் தான் கரையுமே தவிர பிரச்சனை மாதாமாதம் புதிதாக முளைத்து கொண்டே இருக்கும். மறுபுறம், வேலைக்கு வந்த தொழிலாளர்களோ, தங்களது அன்றாட செலவுக்கே நண்பர்களிடம் கையேந்தும் நிலைக்கு செல்வர். இது நாளடைவில் அவர்களை கடனாளியாக மாற்றி விடுகிறது. கடைசி வரை சம்பாதிக்கவே முடியாமல் சொந்த ஊருக்குத் திரும்பும் தொழிலாளர்களிடம், கடைசி ட்விஸ்ட்டாக நம்ம ஜஸ்ட் ப்ரண்ட்ஸ் தான் என அல்வா கொடுத்துவிட்டு அடுத்த அப்பாவிக்கு ரூட் போட சென்றுவிடுவார்களாம் இந்தோனேசிய மங்கைகள்.. உஷாரய்யா உஷாரு!

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts