கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த 35 வயதுடைய நபருக்கு குரங்கம்மை அறிகுறிகள் போல தோல் வெடிப்பு ஏற்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டார். ஆனால் அந்த நபர் அங்கிருந்து காணாமல் போயுள்ளார், உடனே மருத்துவமனை நிர்வாகம் திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் உள்ள காவல்துறை மற்றும் சுகாதாரத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘இறுதியாக அந்த நபர் அவர் வீட்டில் இருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு மீண்டும் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று கூறியுள்ளது.
முழுமையான நோயறிதல் செய்யப்படும் வரை அவரது குடும்பத்தினர் தங்களை தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டனர். “முதன்மை நோய் கண்டறிதலில் குரங்கம்மை நோய்க்கான எந்த அறிகுறியும் காட்டப்படவில்லை, மேலும் அவருக்கு இருந்தது ஒரு தோல் நோய் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,” என்று மருத்துவமனை டீன் எம். பூவதி கூறினார்.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார், மேலும் அவரது ஸ்வாப் மாதிரிகள் உறுதிப்படுத்துவதற்காக புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன, என்று அவர் மேலும் கூறினார்.