TamilSaaga

சிங்கப்பூரில் அதிகாலை 3 மணிக்கு காலிங் பெல் அடித்த “அதிர்ஷ்ட தேவதை”.. ஒரே இரவில் கொட்டிய பணம் – அள்ளிக் கொடுத்த “குட்டி MGR” – ஒரு தேசமே பெருமைப்படும் பிறவி!

ஒருவருக்கு நேரம் நல்லா இருந்தா.. அதை எவராலும் தடுக்க முடியாது என்பதற்கு இந்த லேட்டஸ்ட் சம்பவமே சாட்சி. அதுமட்டுடமின்றி, ஒருவர் இப்படியும் உதவிகள் செய்ய முடியுமா என்று வியக்கவும் வைக்கிறார்.

சிங்கப்பூரைச் சேர்ந்தவர் ஷெரில் டான் (Sheryl Tan). வயது ஜஸ்ட் 32. இங்கு இவர் விஷுவல் ஆர்டிஸ்ட்டாகவும், கிராஃபிக் டிசைனராகவும் உள்ளார். சமீபத்தில் ஒரு “கொடை வள்ளல்” நடத்திய போட்டியில் இவர் கலந்து கொள்ள, தற்போது வீடு தேடி அவருக்கு பனமழை கொட்டியுள்ளது.

அது யாருப்பா கொடை வள்ளல்?

ஆமாங்க.. ச்சும்மா சொல்லல.. இவர் உண்மையாகவே கொடை வள்ளல் தான். அமெரிக்காவைச் சேர்ந்தவர் Jimmy Donaldson. இவர் தனது 11 வயதில் Mr Beast என்ற பெயரில் யூடியூப் சேனலைத் தொடங்கி, தற்போது 151 மில்லியன் ஃபாலோயர்களை தன் வசம் வைத்திருக்கிறார்.

இதனால் வருமானம் கோடிகளில் கொட்ட, பலருக்கு உதவிகளை செய்யத் தொடங்கினார். அறுவை சிகிச்சைக்கு உதவுவது, இல்லாதவர்களுக்கு பணத்தை வாரி வழங்குவது என்பது இவரது வாடிக்கையாகிப் போனது. யார் அவரிடம் சென்று கேட்டாலும் உதவி செய்ய மறுக்கமாட்டார். இதனால், மக்கள் மத்தியில் இவருக்கென்று தனி செல்வாக்கு உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் இவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு போட்டி ஒன்றை அறிவித்தார். அதில், பங்கேற்பாளர்கள் Mr Beast-ன் இன்ஸ்ட்டா பதிவுகளை தங்களது பெர்சனல் ஸ்டோரீஸ்-களில் அப்லோட் செய்து, வேறொருவரின் பெயரை டேக் செய்ய வேண்டும். அதுபோல், பங்கேற்பாளர்கள் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தை ஃபாலோ செய்ய வேண்டும் என்பதே விதிமுறை.

இந்த போட்டியில் மில்லியன் கணக்கான மக்கள் கலந்து கொள்ள, ‘ச்சும்மா நாமும் போட்டுப் பார்ப்போம்’ என்று கலந்து கொண்டவர் தான் சிங்கப்பூரின் ஷெரில் டான். மொத்தம் 10 நபர்களை வெற்றியாளர்களாக Mr Beast அறிவிக்க, அதில் ஒரு அதிர்ஷ்டசாலியானார் ஷெரில். இதனை அவரே தனது பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அதில், நான் வெற்றிப் பெற்ற தகவலை அதிகாலை 3 மணிக்கு, மெசேஜ் வாயிலாக Mr Beast அனுப்பியதாக குறிப்பிட்டுள்ளார். சரி.. பரிசுத் தொகை எவ்வளவுப்பா என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

மொத்தம் 10,000 டாலர்கள். அதாவது, இன்றைய தேதியில் இந்திய மதிப்பில் 8 லட்சத்துக்கும் மேல். ஒரே இரவில் இவ்வளவு பணம் கிடைக்க, தற்போது தனது பிஸ்னஸை இந்த பணத்தைக் கொண்டு அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லப் போவதாக கூறியுள்ளார்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts