TamilSaaga

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட மின்சார வாகனம்.. மலேசியாவில் மின்சாரம் திருடியதாக குற்றச்சாட்டு – அடுத்தடுத்து வெடிக்கும் சர்ச்சை!

சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட மின்சார வாகனம் ஒன்று மலேசிய பெட்ரோல் நிலையத்தில் இருக்கும் Fast Charing நிலையத்தில் இருந்து மின்சாரத்தை திருடியதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தின் புகைப்படம் ஒன்று வாகனம் குறித்த செய்திகளுக்கான மலேசியாவின் நம்பர் ஒன் ஆதாரமாக அறியப்படும் paultan.orgல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் இருந்து சுமார் 180 கிமீ தொலைவில் மலேசியாவின் முதல் ஷெல் ரீசார்ஜ் உயர் செயல்திறன் கொண்ட சார்ஜிங் பாயின்ட் அமைந்துள்ள ஜோகூரில் உள்ள டாங்காக் லே-பையில் உள்ள ஷெல் பெட்ரோல் கியோஸ்கில் இந்த திருட்டு நடந்ததாகக் கூறப்படுகிறது.

சார்ஜிங் பாயின்டைப் பயன்படுதியாக கூறப்படும் அந்த மின்சார வாகனம் சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட BYD T3 மின்சார வேன் ஆகும். வெளியான புகைப்படத்தில், அந்த BYD வேன் Charge செய்யப்பட வேண்டிய இடத்திற்கு (Lot) வெளியே நிற்பதை நம்மால் காணமுடிகிறது. ஏன் என்றால் சார்ஜிங் செய்ய வாகனம் வரும்போது பார்க்கிங் இடத்திற்கு (Lot) நடுவே காணப்படும் அந்த கம்பி கீழே இறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு இந்த நிறுவனத்தில் ஒரு வேலை கிடைக்காதா?.. தொழிலாளர்களை ஏங்க வைக்கும் சிங்கப்பூர் நிறுவனம் – படையெடுக்கும் Resumes

ஷெல் ரீசார்ஜ் என்பது ParkEasy App மூலம் அணுகக்கூடிய கட்டணச் சேவையாகும், இதில் சார்ஜரின் பயன்பாட்டிற்கு பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்றபோது குறிப்பிட்ட அந்த (Lot) இடத்தை பயன்படுத்த பணம் செலுத்த வேண்டும்.

ஆகவே சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட அந்த வாகனம் சரிங் Lotல் நிறுத்தப்படாமல் வெளியில் நிறுத்தப்பட்டு சார்ஜிங் செய்யப்படுவதால் அவர்கள் மின்சாரத்தை திருடுவதாக இந்த செய்தியை வெளியிட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் அந்த LOT வேலை செய்யாமல் இருக்கும்பட்சத்தில் அந்த சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கார், வெளியே இன்று கட்டணம் செலுத்தி சார்ஜிங் செய்ததிருக்கலாம் என்றும் சில நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். இந்த விஷயத்தில் யார் மீது தவறு உள்ளது என்பது அதிகாரிகள் இந்த விஷயத்தை விசாரித்தால் மட்டுமே தெரியும்.

அடுத்தடுத்து கேட்ட வெடிப்புச்சத்தம்.. சிங்கப்பூர் Kusu தீவில் பரவிய பயங்கர தீ – SCDF வரும் முன்பே களமிறங்கி தீயை கட்டுப்படுத்திய “இயற்கை அன்னை”

அண்மைக்காலமாக சிங்கப்பூர் பதிவு வாகனங்கள் மலேசியாவில் சட்டவிரோதமாக எரிபொருள் நிரப்புவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்ற இந்த நேரத்தில் மீண்டும் அதே போன்ற ஒரு சர்ச்சை வெடித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts