TamilSaaga

“அசத்துங்க”.. சீன அதிபருக்கு சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் வாழ்த்து.. அப்படி என்ன செய்யப்போகிறது சீனா?

நேற்று (பிப்.6) நமது சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து, 24-வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை பெய்ஜிங்கில் வெற்றிகரமாக நடத்தியதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகளின் சிறந்த நிலையை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
இது கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் நேர்மறையான தருணத்தை தக்க வைத்துக் கொண்டது”, என்று சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் (MFA) வெளியிட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டில் சிங்கப்பூர்-சீனா இராஜதந்திர உறவுகளின் 30 வது ஆண்டு நிறைவையொட்டி சீனாவில் உள்ள சிங்கப்பூர் சமூகத்தால் தொடங்கப்பட்ட தொண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக சோங்கிங்கில் (Chongqing) உள்ள பெங்ஷூய் கவுண்டியில் (Pengshui County) கட்டப்பட்ட மாணவர் விடுதியின் “Zhixinlou” (知新楼) பெயரை சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் வெளியிட்டனர்.

இந்த விடுதியானது சிங்கப்பூர் மற்றும் சீன மக்களுக்கு இடையே உள்ள வலுவான நட்புறவையும், இரு நாடுகளும் கல்வியில் இணைக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தையும் அடையாளப்படுத்துவதாக ஹலிமா குறிப்பிட்டார்.

மேலும் படிக்க – தெலுக் பிளாங்கா ரைஸ் கோர தீ விபத்து.. துளி அச்சமின்றி தீயை அணைத்த வீரமங்கை “கங்காதேவி” – பெருமை கொள்ளும் சிங்கப்பூர்

ஜெயண்ட் பாண்டா பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சியில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை வழங்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) கையெழுத்திடுவதை அதிபர் ஹலிமா மற்றும் அதிபர் ஜி ஜின்பிங் வரவேற்றனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சிங்கப்பூரின் வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகம் (MTI) மற்றும் சீனாவின் தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகம் (NFGA) கையெழுத்திட்டன.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், சிங்கப்பூர் வனவிலங்கு காப்பகங்கள் (WRS) மற்றும் சீனா வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் (CWCA) ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்று வரும் கூட்டுப் பாதுகாப்பு மற்றும் ராட்சத பாண்டாவின் ஆராய்ச்சியின் கூட்டுச் செயலாக்கத்தை MTI மற்றும் NFGA ஆதரிக்கும்.

இது ஜெயண்ட் பாண்டா பாதுகாப்பு மற்றும் மேலாண்மை தொடர்பான தொடர்புடைய ஏஜென்சிகள் மற்றும் தொழில்நுட்ப அமைப்புகளுக்கு இடையே பரிமாற்றங்கள் மற்றும் அறிவுப் பகிர்வுகளை ஊக்குவிக்கும்.

இருதரப்பு உறவுகளைத் தொடர்ந்து மேம்படுத்த இரு நாடுகளும் நெருக்கமாக பணியாற்ற வேண்டும் என்று இரு நாட்டு அதிபர்களும் ஒப்புக்கொண்டனர், என்று MFA கூறியது. மேலும் சிங்கப்பூரும் சீனாவும் தற்போதுள்ள ஒத்துழைப்புத் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்று அவர்கள் உறுதிப்படுத்தினர்.

மேலும் படிக்க – Exclusive: கத்தார் நாட்டில் Two Wheeler License உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு – வரும் பிப்.11 தஞ்சையில் நேர்காணல்

டிஜிட்டல் பொருளாதாரம் (Digital Economy), பசுமைப் பொருளாதாரம் (Green Economy) மற்றும் ஸ்மார்ட் நகரங்கள் (Smart Cities) போன்ற புதிய துறைகளில் அதிக ஒத்துழைப்பை இரு தலைவர்களும் வரவேற்றனர். சிங்கப்பூர் மக்கள் சார்பாக, அதிபர் ஹலிமா சீன புத்தாண்டு வாழ்த்துக்களை (Lunar New Year) சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் சீன மக்களுக்கு தெரிவித்தார்.

சனிக்கிழமையன்று, சீனப் பிரதமர் லீ கெகியாங்குடன் அதிபர் ஹலிமா இருதரப்பு சந்திப்பை நடத்தினார். சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான வலுவான உறவுகளை அவர்கள் உறுதிப்படுத்தினர்.

அதுமட்டுமின்றி, குளிர்கால ஒலிம்பிக்கின் தொடக்கத்திற்காக சீனாவிற்கு வந்திருந்த செர்பியா, எகிப்து, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் சீன அதிபர் ஜி சந்திப்புகளை நடத்தினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts