சிங்கப்பூர் வர பல வழிகள் இருக்கிறது. அதில் ஏஜென்ட்டின் மூலம் கம்பெனி தேர்வு செய்து அதில் சிங்கப்பூர் வேலைக்கு வருவது இல்லையென்றால் தமிழ்நாட்டில் இருக்கும் இன்ஸ்டியூட்களில் அட்மிஷன் போட்டு தெரிந்த துறைகள் ஒன்றில் பயிற்சி பெற்று தேர்வு எழுத வேண்டும். அதில் பாஸ் ஆகி கம்பெனி போட்டு சிங்கப்பூர் வேலைக்கு வர வேண்டும்.
சிலருக்கு ஏஜென்ட் ஏமாற்றவும் செய்யலாம். அதனால் பல லட்சங்களை இழக்கவும் நேரிடலாம். அப்படி இருக்கும் போது பலரும் ஒரு பயத்துடனே இருப்பார்கள். இதனால் சிங்கப்பூர் செல்ல என்ன செய்யலாம் என யோசிக்கும் போது இருக்கும் இன்னொரு வழி Skilled டெஸ்ட் அடிப்பது தான். Skillல் பல துறைகள் இருக்கிறது. அதில் உங்கள் அனுபவத்துக்கு ஏற்ப ஒரு படிப்பை தேர்ந்தெடுக்கலாம். சிலருக்கு இதில் நேரடியாக அனுபவம் இருப்பதால் உடனே படிப்பினை தேர்ந்தெடுத்து விடுவார்கள். ஆனால் இதில் கூட சிலருக்கு ஒரு குழப்பம் இருக்கும். அப்படி உங்களுக்கும் ஒரு குழப்பம் இருந்தால் இந்த பதிவினை தொடர்ந்து படியுங்கள்.
இதையும் படிங்க: அம்மா என்னால சாப்பிடாம இருக்க முடியல… முதல் நாள் ரமலான் விரதத்தால் கலங்கிய சிங்கப்பூர் சிறுவன்… இட்ஸ் ஓகே கண்ணா கன்னம் தட்டிய அன்னை!
Pipe Fitting Welding Skill:
பல ஸ்கில் போன்று இதிலும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. வெல்டிங் அனுபவத்தில் இருந்தால் இந்த ஸ்கில் எளிதாக தேர்ச்சி பெற்று விடலாம். ஆனால் தெரியாமல் இதில் பயிற்சிக்கு வரும் போது ரொம்பவே கஷ்டமாக தான் இருக்கும். ஆனால் இந்த ஸ்கில் படிப்பில் மிகப்பெரிய ப்ளஸ் என்றால் சிங்கப்பூரில் இந்த துறைகளில் வரும் ஊழியர்களுக்கு பெரிய அளவிலான சம்பளம் கொடுக்கப்படும்.
தேர்வு எப்படி இருக்கும்:
- எழுத்து தேர்வு 25 கேள்விகள் இருக்கும். இதில் 13 கேள்விக்கு பதில் அளித்தாலே பாஸ் செய்து விடலாம். அனைத்துமே டிக் செய்யும் கேள்விகளாக தான் இருக்கும். இதற்கு ஒரு மணி நேரம் கொடுக்கப்படும்.
- இதை தொடர்ந்து மற்ற டெஸ்ட்டினை போல பிராக்டிக்கல் தேர்வு நடக்கும். இதற்கு 4 மணி நேரம் கொடுப்பார்கள். நீளமான கம்பியை கொடுத்து தந்த வரைப்படத்திற்கு ஏற்ப அதை வெல்டிங் செய்து பிட் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் Tourist விசாவில் வந்து வேலை செய்யும் ஐடியால இருக்கீங்களா? சிறை தண்டனை மட்டுமல்ல பெரிய தொகை கூட அபராதம் இருக்கும்… சிக்கிய சிலர்!
வெல்டிங் தெரியாமல் இந்த ஸ்கில்லில் அட்மிஷன் போடும் போது அதை தெரிந்து கொள்ளவே 1 மாதம் நேரம் எடுக்கும். இதனால் வெல்டிங் தெரிந்து கொண்டு இந்த துறைகளில் சேரலாம். ஆனால் இத்தனை கஷ்டப்பட்டாலே சிங்கப்பூரில் பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.