TamilSaaga

சிங்கப்பூரில் தடுப்பூசி போடாத தொழிலாளர்கள் : அறிமுகமாகும் அடையாளமுறை – முழு தகவல்

சிங்கப்பூரில் பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் இந்த மாதம் (ஆகஸ்ட்) 16ம் தேதி முதல் கட்டுமான தளங்களில் இருக்கும் வேளையில் தாங்கள் தடுப்பூசி போடவில்லை என்பதை வெளிப்படுத்தும் முறையில் அடையாளங்களை அணிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நாட்டில் கிருமி பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக கட்டுமான ஆணையம் நேற்று (ஆகஸ்ட் 5) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இருப்பினும் இந்த அடையாளம் எப்படி இருக்கும் என்பதை குறித்து ஆணையம் தெரிவிக்கவில்லை, எனினும் தலைக்கவசம், மேலாடை போன்ற விஷயங்களை கொண்டு இந்த அடையாளம் காண்பிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. தொழிலாளர்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட இந்த விஷயம் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூலை மாதத்தில் சில தினங்களில் நாட்டில் பெருந்தொற்று இல்லாமல் இருந்த நிலையில் மீண்டும் கே.டிவி மற்றும் ஜூரோங் கிளஸ்ட்டர் மூலம் மீண்டும் தொற்று எண்ணிக்கை நாட்டில் தலைதூக்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கிருமி பரவலை தடுக்க அரசு பல முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. சிங்கப்பூரின் தேசிய தின அணிவகுப்பும் இந்த கிருமி பரவல் காரணமாக ஆகஸ்ட் 21ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts