சிங்கப்பூரில் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வரும் பெண் ஒருவர், சிகிச்சை சரியில்லை என்று மிக மோசமான ஆபாச வார்த்தைகளால் தனக்கு சிகிச்சை அளிக்கும் செவிலியரை கண்டபடி திட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அந்த பெண், செவிலியரிடம் ‘தனக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், தன்னை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்றும் கூறி கெட்ட வார்த்தைகளால் திட்டும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்
அப்பெண் அவ்வளவு மோசமாக பேசியும், சிகிச்சை அளிக்கும் நர்ஸ் மிக நிதானமாக அவருக்கு பதில் அளிக்கிறார். அப்படியும் விடாமல் ஆபாச வார்த்தைகளை சரளமாக அந்த நோயாளிப் பெண் பயன்படுத்தியுள்ளார்.
இந்த வீடியோவை 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இதுவரை பார்த்திருக்கும் நிலையில், பலரும் அந்த பெண்ணை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, இந்த வீடியோவை பார்த்த சுபாஷினி பிரியா என்ற பெண் தனது பதிவில், “உங்கள் கட்டளைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டுமெனில், தயவு செய்து மருத்துவமனைக்குச் செல்ல வேண்டாம். நீங்கள் தங்குவதற்கும் நீங்கள் தங்கியிருக்கும் போது நீங்கள் விரும்பியதைச் செய்வதற்கும் இது ஒன்னும் ஆடம்பரமான ஹோட்டல் அல்ல. உங்களை கவனித்துக் கொள்ள அயராது உழைப்பவர்களிடம் கொஞ்சமாவது நல்ல குணத்தை வெளிப்படுத்துங்கள்” என்று பதிலளித்துள்ளார்.
சுபாஷினியின் இந்த பதிவை பலரும் ஆமோதிக்கும் வகையில் லைக் செய்துள்ளனர்.
Content and Video Source: Singapura Viral