TamilSaaga

Exclusive: பணம் கட்டுவது குறைவு என்பதால் அரபு நாடுகளில் வேலைக்கு செல்வது சிறந்ததா? அல்லது கஷ்டப்பட்டாலும் சிங்கப்பூர் செல்வது சிறந்ததா? – Detailed Analysis

வேலை தேடி இடம்பெயரும் நீண்டதொரு வரலாறு தமிழ்நாட்டுக்கு இருக்கிறது. தற்போது தமிழ்நாட்டினர் உலகெங்கும் விரவியுள்ளன, குறிப்பாக 17 நாடுகளில் அதிகளவில் பணிபுரிந்து கொண்டிருக்கின்றனர். 

சிங்கார சிங்கப்பூர்

சிங்கப்பூரில் பணிபுரியும் பெரும்பாலான வெளிநாட்டு தொழிலாளர்கள் இந்தியர்களே. தமிழ்நாட்டிலிருந்து வெளிநாட்டு வேலைக்குச் செல்பவர்களில் ஐந்தில் ஒருவர் சிங்கப்பூருக்குச் செல்கிறார். 200 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கும் தமிழர்களுக்கும் உள்ள கலாச்சாரத் தொடர்பு ஒரு முக்கியக் காரணம். மேலும் இவ்விரு நாடுகளிலும் ஆட்சிமொழிகளில் தமிழும் ஒன்றாக இருக்கிறது. அதற்கடுத்த நிலையில் ஐக்கிய அரபு நாடுகளுக்கு அதிகம் பேர் செல்கின்றனர். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்பவர்கள் பெரும்பாலும் உயர் கல்வி பெற்று தொழில்திறன் அதிகமுள்ளவர்களாகவே இருக்கிறார்கள். வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை, எண்ணெய் மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக குறைந்த தொழில்திறன் கொண்ட தொழிலாளர்களே தேவைப்படுகின்றனர்.

அப்போ வெறும் 5 நிறுவனம்.. இப்போ 71 நிறுவனம் : சிங்கப்பூரில் Angpowsக்கு மாற்றாகும் “QR Angpows” – DBS தரும் அசத்தல் தகவல்

கேரளத்தோடு ஒப்பிடுகையில், தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்குச் செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் தமிழ்நாட்டிலிருந்து ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் சவுதி அரேபியாவுக்குச் செல்பவர்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாகக் கேரளத்திலிருந்து செல்கின்றனர்.

பெண்கள் அரபு மற்றும் வளைகுடா நாடுகளுக்கும் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கும் வீட்டு வேலைகள் பார்ப்பதற்காகவே செல்கின்றனர். பெண் தொழிலாளர்களைப் பொறுத்த வரையில் திருப்பூர், நாமக்கல், கோயம் புத்தூர் முதலிய தொழிற்சாலைகள் மிகுந்துள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகளவில் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ஏற்கெனவே சுமங்கலி திட்டத்தின் கீழ், இளம் வயதிலேயே விசைத்தறி முதலாளிகளால் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளான அந்தப் பெண்களுக்கு, இத்தகைய கடின வேலைகள் பழகிப்போனவையாக இருக்கின்றன. வெளிநாடு செல்லும் தொழிலாளர்களில் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக எண்ணிக்கையில் உயர்கல்வி பெற்றவர்கள். ஆனால் அதே நேரத்தில் அவர்களில் ஏறக்குறைய 20% பேர் எழுத்தறிவு இல்லாதவர்கள்.

கல்வியறிவின்மையால் வேலை பார்க்கும் வீடுகளில் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட சிக்கல்களை எதிர்கொள்ளும்போது உதவி கோரி இந்திய தூதரகத்தைத் தொடர்புகொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள். பெண்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதற்கு முன்பு, அவர் களுக்கு முறையான பயிற்சியும் விழிப் புணர்வும் அளிக்க வேண்டியது அவசியம்

கடந்த ஆண்டு அதிக வேலை வாய்ப்பு கொண்ட டாப் 10 நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. தற்போது இருக்கும் டிஜிட்டல் உலகில், மக்கள் பல்வேறு காரணங்களுக்காக இடம்பெயருகிறார்கள். அதில் முக்கியமான ஒன்றாக வேலை உள்ளது. வெளிநாடுகளில் வேலை செய்ய சிறந்த நாடுகளில் சிங்கப்பூர் ஒன்றாகும். சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு விகிதம் கடந்த 2018 முதல் 65.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சிங்கப்பூரின் மனிதவள அமைச்சகத்தின்படி, வேலைவாய்ப்பு பகிர்வு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

  • Manufacturing (12.4%)
  • Construction (11.2%)
  • Services (75.6%)
  • Others (0.7%)

பொதுவாகவே வேலைவாய்ப்பு தேடுகிற, பொருளாதார தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக, வாய்ப்புத் தேடும் எல்லா ஆசிய நாட்டவர்களுக்கு சிங்கப்பூர் ஒரு முக்கியமான, வாய்ப்புகளின் வாசலாகவே  விளங்கி வருகிறது.

  1. உலகமயமாக்கப்பட்ட, திறந்த பொருளாதாரம்.
  2. வேலை எதுவானாலும் சேமிக்கும் அளவுக்கான லாபகரமான சம்பளம்.
  3. முற்போக்கான தனிநபர் வரி அமைப்பு . 22,000 S$ ஆண்டு வருமானம் வரை வரி இல்லை.320,000S$  ஆண்டு வருமானத்திற்கு மேல் தான் 20 % வரி.
  4. எளிதில் பெறக்கூடிய வேலை அனுமதி மற்றும் குடியிருப்பு அனுமதி.
  5. பல்வேறு நாட்டவரும் கலாச்சாரங்களும் இணைந்த இணக்கமான சூழல் நிலவுவதால், பனித் தளத்தை எளிதில்  தன்மயமாக்கிக் கொள்ளும் வாய்ப்பு.
  6. உலக வங்கியின் அறிவுறுத்தல் படி வியாபாரத்தை தொடங்குவதும்,தொடர்வதும் எளிது.
  7. மிகச் சிறந்த தொழிலாளர் வளம்.
  8. குறைவான குற்றம் மற்றும் லஞ்ச ஊழல் தொந்தரவுகள். ( சாதாரண ஒரு சிறிய வேலைக்கே அரசு அலுவலகங்களில் 500,1000 என்று கொடுத்து பழகியவர்களுக்கு இது பெரிய ஆறுதல் இல்லையா?
  9. தொடர்ந்து நடக்கும் நிலையான ஒரே கட்சி ஆட்சி.
  10. புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு அமைப்புகள், உதவிகள், வழிகாட்டு நெறிமுறைகள்.

இந்த முக்கியமான முதன்மையான காரணங்கள் எல்லாரையும் ஈர்ப்பது போல் தமிழக இளைஞர்களையும் ஈர்க்கின்றன என்றாலும் இவைகளையும் தாண்டி, நமக்கே நமக்கான, தமிழக புலம்பெயர்வோருக்கான சிறப்புக் காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

முதலாவது சிங்கப்பூரின் பண மதிப்பும், மாத வருமானமும்…

ஒரு சிங்கப்பூர் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 55 ₹ .மிக அடிப்படையான நமது வழக்கில் சொல்வதானால் கூலி வேலை பார்ப்பதாக இருந்தாலும், சிங்கப்பூரில் மாத வருமானம் 1060 சிங்கப்பூர் டாலர்கள் (S$) இந்திய ரூபாய்க்கு 58,300 ரூபாய்கள் .தமிழகத்தில் ஒரு கூலித் தொழிலாளி மாதம் ஏறக்குறைய 60 ஆயிரம் சம்பாதிப்பது என்பதை நினைத்துப் பார்க்க முடியுமா? இது அடிப்படை தான்…

S- Pass என்று சொல்லப்படக்கூடிய திறன்சார் வேலைகளில் அதாவது கல்வியறிவு சாராத மற்ற வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு சிங்கப்பூர் அரசு நிர்ணயித்த மாத வருமானம் 2500 S$. அப்படியானால் மாத வருமானம் 1,37,500 ரூபாய்.

தமிழகத்திலோ ஒரு கூலி தொழிலாளி ஒரு நாளைக்கு பெறக்கூடிய குறைந்தபட்ச சம்பளம் 150 ரூபாய் .மாத வருமானம் 4,500 ரூபாய். அதுவும் முப்பது நாளும் வேலை இருந்தால் தான் அதுவும் சாத்தியம்.

அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ஒரு சாதாரண தொழிலாளி சம்பாதிக்கக்கூடிய ரூபாய் 800. மாத வருமானம் 24,000.அதுவும் கூட மாதம் முப்பது நாளும் வேலை இருந்தால் தான். போதாதென இங்கே ஒன்றுக்கு இரண்டு ,மூன்று, நான்கு பட்டங்களை வைத்துக் கொண்டும் மாதம் ஐந்தாயிரத்திற்கும் பத்தாயிரத்திற்கும் வேலை செய்கிற லட்சக்கணக்கான படிப்பாளிகளும் உண்டு. ஐந்தாறு பட்டங்களோடு உள்நாட்டில் 10,000 15,000 ரூபாய்க்கு வேலை செய்வதை விட ,சிங்கப்பூரில் கூலித்தொழில் அல்லது சாதாரண திறன் சார் வேலை பார்த்தாலும் மாதம் 60 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை சம்பாதிக்கலாமே.

சிங்கப்பூரில் Dormitory என்று சொல்லப்படுகிற தங்கும் இடங்களில் மிகக் குறைந்தபட்சமாக 230 சிங்கப்பூர் டாலர்கள் தொடங்கி அறைகள் மாத வாடகைக்கு கிடைக்கும். பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு தங்கும் இடங்களை அவர்களே ஏற்படுத்திக் கொடுத்து விடுவார்கள்  என்பது தனிக்கதை.மற்ற செலவுகள் எல்லாம் பணியாளரின் தனித் தேவை, அவரது சேமிப்பு திறன் பொருத்தது.

ஒரு பொது மதிப்பாக போட்டுப் பார்த்து, ஒரு மாதம் அறை வாடகை 300 S$, மற்ற செலவுகள் 500 S$ என்று வைத்துக்கொண்டாலும், ஒரு கடைநிலை தொழிலாளர் மாதத்திற்கு 200 S$ வரை மிச்சப்படுத்தலாம். அந்த 200 S$ நமக்கு 11,000 ரூபாய். ஒரு சாதாரண ஏழை, நடுத்தர குடும்பத்தின் செலவுகளை மேற்கொள்ள இந்தத் தொகை போதுமே.

அடுத்தடுத்த கட்டங்களில் இந்த தொகை அதிகரிக்கத் தானே செய்யும். சிங்கப்பூரில் வேலை செய்கிற ஒரு தமிழர், மிகக் குறைந்தபட்சம் மாதம் 300 S$ லிருந்து 500 S$ வரை சேமித்தாலே, இங்கு அவரது குடும்பம் தன்நிறைவோடு செலவுகளையும் சமாளித்து, சேமிக்கவும் செய்ய முடியுமென்றால், சிங்கப்பூர் வேலையை விரும்பத்தானே செய்வார்கள்.

கொரோனா பரவல் காரணமாக, வெளிநாட்டு ஊழியர்களின் வரவைக் கட்டுப்படுத்திய எல்லைக் கட்டுப்பாடுகளால் காலிப் பணியிடங்கள் அதிகரித்துள்ளன.

குறிப்பாக, work permit வைத்திருக்கும் பெரும் அளவிலான ஊழியர்கள் வேலையை விட்டு சென்றதால், உற்பத்தி, கட்டுமானம், உணவு மற்றும் பான சேவைகள் மற்றும் நிர்வாக மற்றும் ஆதரவு சேவைகள் போன்ற துறைகளில் காலிப் பணியிடங்கள் அதிகரித்துள்ளன.

எல்லை கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரை, வேலை காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் வேலையில்லாத நபர்களுக்கான வேலை காலியிடங்களின் விகிதம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மென்பொருள், வெப் மற்றும் மல்டிமீடியா டெவலப்பர்கள், கணினி ஆய்வாளர்கள், வணிக மற்றும் சந்தைப்படுத்தல் விற்பனை நிர்வாகிகள், கணக்காளர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோரின் தேவைகளும் அதிகரித்துள்ளன.

 பொருளாதாரத்தில் சிங்கப்பூர் பெற்றுள்ள வெற்றிக்கு உலகளாவிய தொழிலாளர்களின் மிகப்பெரிய உழைப்பே காரணம். ஆனால், தற்போது வெளிநாட்டு தொழிலாளர்களை முன்வைத்து சிங்கப்பூரில் எழுந்துள்ள அரசியல் பிரச்னைகள் சர்வதேச கவனத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் பிரச்னைகள் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஒரு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

பிரிட்டிஷ் காமர்ஸ் ஆஃப் சிங்கப்பூர் வணிக நிறுவன கணக்கெடுப்பின்படி, 2021-ஆம் ஆண்டின் முதல் பாதியில் சிங்கப்பூரின் சிறிய நகரங்களில் பணிபுரியும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 18% ஆக சுருங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 மாதங்களில் வேலைவாய்ப்பு பெற்ற வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையும் 21,600 என்ற அளவில் குறைந்துள்ளது. சிங்கப்பூர் குடிமக்கள் வேலையின்மை விகிதம் 2020-ன் மூன்றாவது காலாண்டில் 4.9% என்ற அளவை எட்டியிருக்கிறது. 2009-ம் ஆண்டு இருந்ததை விட இது அதிகம். இதுபோன்ற விஷயங்கள் வெளிநாட்டு தொழிலாளர்களின் வேலை வாய்ப்புகளுக்கான கடுமையான பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் நீண்டகாலமாகவே வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பிரச்னை, முக்கிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இது அரசியல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கடந்த பொதுத்தேர்தலில் சிங்கப்பூரின் முன்னணி எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி இதுவரை இல்லாத வகையில் 93 நாடாளுமன்ற தொகுதிகளில் 10 இடங்களை வென்று அசத்தியது. இந்த வெற்றிக்கு பிரதான காரணமாக அமைந்தது, அந்தக் கட்சி வெளியிட்ட சில அறிவிப்புகள்தான். வெளிநாட்டு தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை கடினமாக்குவது, சிங்கப்பூரின் பூர்வகுடிகளை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவகு உட்பட அக்கட்சி வெளியிட்ட வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகள் மக்கள் மத்தியில் எடுபட இதுவரை இல்லாத அளவு வெற்றியை ருசித்தது.

இதனால் வரவிருக்கும் தேர்தல்களின்போதும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பிரச்னை, முக்கிய பிரச்னையாக உருவெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப தற்போது எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை கையிலெடுத்து பேசி வருகின்றன. மேலும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் புலம்பெயர்ந்தோர்கள், அவர்களின் வேலைவாய்ப்பை பற்றிய ஆய்வை தனிப்பட்ட முறையில் எடுக்க தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே கொரோனா பெருந்தொற்று, அதனால் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் போன்றவை வெளிநாட்டுத் தொழிலாளர்களை பணியமர்த்துவதில் கடும் சவால்களை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது எழுந்துள்ள அரசியல் சர்ச்சைகளும் அவர்களுக்கான வாய்ப்பை கேள்விக்குறியாக்கி வருகின்றன.

சிங்கப்பூர் Expressway.. அதிவேகத்தில் சென்ற கார் : “Fishtailing” ஆனதால் தூக்கி வீசப்பட்ட Video – தொடர்ந்து எச்சரிக்கும் SPF

துபாய்க்கு போகிறேன்

 ஒரு காலத்தில் ‘துபாய்க்கு போகிறேன்’ என்று சொன்னால், அங்கு வேலைக்கு போகிறேன் என்பதே பொதுவான பொருள். அமீரகத்திற்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் கூட்டாக வசிக்கும் கட்டடங்கள் தொழிலாளர் முகாம் என்று அழைக்கப்படுகிறது.

ரயில்களில் காணப்படும் படுக்கை வசதியைப் (பெர்த்) போலவே, அவர்களது படுக்கைகளும் அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளன. தொழிலாளர் முகாமில் இருக்கும் அறைகளைப் பார்த்தால் மாணவர் விடுதியில் இருக்கும் அறைகளைப் போலவே காணப்படுகின்றன. அங்குள்ள சமையலறை, கழிவறை போன்றவை மிகவும் சுத்தமாக காணப்படுகிறது. அமீரகத்தில் இருக்கும் இதுபோன்ற பல முகாம்களில் லட்சக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் வசிக்கின்றனர்.

வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ள புள்ளி விவரங்களின்படி இந்தியாவை சேர்ந்த 28 லட்சம் பேர் இங்கு வசிக்கின்றனர். அதில் தொழிலாளர்களின் எண்ணிக்கை மட்டும் 20 லட்சம். அதில் பத்து லட்சம் பேர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் தகவல்.

கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மாதம் 2000 திர்ஹம் அதாவது இந்திய மதிப்பில் 36 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. அதில் 15 முதல் 20 ஆயிரம் ரூபாயை வீட்டிற்கு அனுப்புகின்றனர். வாகன ஓட்டுனர்களின் சம்பளம் மூன்றாயிரம் திர்ஹம் அதாவது இந்திய மதிப்பில் 54 ஆயிரம் ரூபாய்.

ஆனால் தற்போது நடுத்தர வர்க்க மக்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

கட்டுமானப் பணியில் இந்தியத் தொழிலாளர்கள் மட்டுமல்ல, பொறியாளர்களும் பணிபுரிகின்றனர்.மாதம் பத்தாயிரம் திர்ஹம் (180,000 ரூபாய்) ஊதியம் கிடைக்கும் வேலை என்பது நடுத்தர வர்க்க மக்களிடையே சிறந்த வேலையாக பார்க்கப்படுகிறது. ஆனால் இங்கு வீட்டு வாடகை மிகவும் அதிகம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். சம்பளத்தில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை வீட்டு வாடகையாகவே செலவளிக்க நேரலாம்.

உலகில் இருக்கும் மொத்த கிரேன்களில் 30 சதவிகிதம் துபாயில் உள்ளது.

அதாவது, இங்கு கட்டுமான பணியாளர்களின் தேவை மட்டுமின்றி, பொறியாளர்கள் அதிலும் குறிப்பாக சிவில் பொறியாளர்களின் தேவையும் அதிகம். கடந்த 20 ஆண்டுகளாக  சிறப்பான வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும், இப்போதும் வளர்ச்சியின் பாதையில் பீடுநடை போடுகிறது, அமீரகம்.

இந்தியாவில் வேலைவாய்ப்புகள் இருந்தாலும், ஜி.எஸ்.டி, பணவிலக்க நடவடிக்கை போன்றவற்றால் வேலைவாய்ப்புகள் குறைந்துவிட்டன. ஆனால் இங்கு வேலைக்கு பாதுகாப்பு இருக்கிறது. ஒருவர் வேலை செய்யும் நிலையில் இருக்கும்வரை வேலைக்கு பாதுகாப்பு உள்ளது, சம்பளமும் உறுதியாக கிடைக்கும்.

துபாயில் ஏற்கனவே வளர்ச்சியடைந்த இடங்களைத் தவிர, வேறு பல புதிய இடங்களும் மேம்படுத்தப்படுகின்றன. அங்கு கட்டுமானப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. எனவே இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்தியர்களுக்கு இங்கு வேலைவாய்ப்பு உறுதி என்பதை அறுதியிட்டுச் சொல்லலாம்.

“பாடாய்படுத்துகின்ற தொற்று” : சிங்கப்பூரில் கிடுகிடுவென உயரும் விலைவாசி – அல்லல்படும் நடுத்தரவர்க்கம்

வளைகுடா நாடுகளில் ஒன்றான அமீரகத்தில் வேலை நாட்கள் பற்றிய புதிய அறிவிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, உலகில் முதன்முறையாக வாரத்திற்கு 4.5 நாட்கள் வேலை நாட்களாகும்.வெள்ளி மதியம் தொழுகை முடிந்தவுடன், தொடர்ந்து இரண்டரை நாட்கள் அங்கு விடுமுறை ஆகும். தொழில் மற்றும் குடும்பங்களைப் பார்க்கும் வகையில் இந்த முடிவு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகிலேயேஅதிகபட்சமாகஅமீரகத்தில் 35 லட்சம் இந்தியர்கள் வசித்து வருவதாக .நா.பையின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரத்துறை மூலம் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் அண்மையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வசித்து வரும் இந்தியர்களில் அதிக அளவில் அமீரகத்தில் வசித்து வருகிறார்கள். அமீரகத்தை இந்தியர்கள் தங்கள் 2-வது வீடாக கருதுகிறார்கள்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts