TamilSaaga

சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியருக்கு “குரங்கம்மை தொற்று” உறுதி – MOH அறிவிப்பு – வெளிநாட்டு ஊழியர்களே இனி கவனமா இருங்க!

SINGAPORE: சிங்கப்பூரில் மற்றொரு குரங்கம்மை (monkeypox) தொற்று பாதிப்பை சுகாதார அமைச்சகம் (MOH) உறுதிப்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் வசிக்கும் 36 வயதான இந்திய நாட்டைச் சேர்ந்தவருக்கு தான் monkeypox உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து திரும்பியவர் என்று MOH தெரிவித்துள்ளது.

அவருக்கு நேற்று (ஜுலை 7) வியாழன் அன்று நடத்தப்பட்ட சோதனையில், குரங்கம்மை தொற்று உறுதியானது. தற்போது அவர் சிங்கப்பூர் தொற்று நோய்களுக்கான தேசிய மையத்தில் (NCID) சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள MOH, “அமெரிக்காவில் இருந்து வந்திருந்தாலும், அந்த நபருக்கு ஏற்கனவே குரங்கம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை. எனவே, எப்படி அவருக்கு இந்த தொற்று ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் forklift truck-ல் சிக்கி இந்திய தொழிலாளர் உயிரிழப்பு.. துளி கூட பொறுப்பின்றி வாகனத்தை இயக்கிய சக ஊழியர் கைது! – காலையிலேயே உயிரை பறித்த துயர செய்தி!

அந்த நபர் கடந்த ஜூன் 28 அன்று உடலில் அசௌகரியத்தை உணர்ந்திருக்கிறார். பிறகு குரங்கம்மை தொற்றுக்கான பொதுவான அறிகுறிகளான சொறி உள்ளிட்ட பிற அறிகுறிகள் அடுத்த சில நாட்களில் படிப்படியாக தெரிந்துள்ளன.

புதன்கிழமை, அந்த நபர் மருத்துவ உதவியை நாடினார், அதே நாளில் NCID க்கு அழைத்துச் செல்லப்பட்டார். பிறகு அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடந்த மாதம் பிரிட்டனைச் சேர்ந்த நபருக்கு சிங்கப்பூரில் குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது. சிங்கையில் 2019க்கு பிறகு கண்டறியப்பட்ட முதல் குரங்கம்மை தொற்று இதுதான். அதன் பிறகு, அண்மையில் உள்ளூரிலேயே ஒருவருக்கு குரங்கம்மை தொற்று ஏற்பட்டது. இப்போது 2வது Imported Case-ஆக இந்தியாவைச் சேர்ந்த நபருக்கு குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts