TamilSaaga

விரைவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நற்செய்தி.. Dormitory கட்டுப்பாடுகளில் தளர்வு? – MOM தகவல்

மனிதவள அமைச்சகம் (MOM) சிங்கப்பூரில் தங்குமிடங்களில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான கட்டுப்பாடுகளை “படிப்படியாக தளர்த்தும்” என தெரிவித்துள்ளது.

இது ஒரு “தடுப்பூசிக்கான வித்தியாசமான அணுகுமுறையாக” இருக்கும் என்று MOM நேற்ற்ய் வியாழக்கிழமை (செப் 9) கூறியுள்ளது.

தடுப்பூசி போடப்படாத தொழிலாளர்கள் கடுமையான பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அல்லது கூடுதல் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது.

பல்லாயிரக்கணக்கான கோவிட்19 வழக்குகள் கண்டறியப்பட்ட பிறகு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தங்குமிடங்கள் முழுவதும் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

தங்கும் விடுதிகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் முழு தடுப்பூசி முறையை முடித்துவிட்டதாகவுன் மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது.

“COVID-19 இன் பரவலை சோதிக்கவும், கண்டறியவும் மற்றும் கட்டுப்படுத்தவும் பல அடுக்கு நடவடிக்கைகளை செயல்படுத்துவதோடு, நாங்கள் இப்போது தங்குமிடங்களில் ஏதேனும் தொற்று குழுமம் ஏற்பட்டால் அதனை கையாளத் தயாராக இருக்கிறோம்” என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts