TamilSaaga

சிங்கப்பூரில் Forklift பயின்றதாக போலி சான்றிதழ்.. விபத்தை ஏற்படுத்தி சிக்கிய ஆப்பரேட்டர் – 45 வாரம் சிறை தண்டனை

சிங்கப்பூரின் மனிதவள அமைச்சகம் நேற்று தனது முகநூல் பக்கத்தில் ஒரு விபத்து சார்ந்த நிகழ்வை பற்றி பதிவு செய்திருந்தது.

சிங்கப்பூரில் Forklift ஆப்பரேட்டராக பணியாற்றி வந்தவர் ஏ.எல் மாமுன். அவர் தனது பணியிடத்தில் ஒரு விபத்தை ஏற்படுத்தி அதனால் சிக்கலில் சிக்கிக்கொண்டார்.

அதிவேகமாக forklift ஒன்றை பொறுப்பற்ற முறையில் ஓட்டி அங்கிருந்த ஒரு லாரி ஓட்டுனர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதில் அந்த ஒட்டுனர் பலத்த காயங்களாலும் எலும்பு முறிவாலும் பாதிக்கப்பட்டார்.

அதற்கு பின்பு நடத்தப்பட்ட விசாரணையில் தான் ஒரு தகவல் தெரிந்தது. அந்த அப்பரேட்டர் Forklift பயிற்சி பெற்றவர் என போலியாக ஒரு சான்றிதழை அளித்துள்ளார். உண்மையில் அவர் அப்படி ஒரு பயிற்சியை பயிலவில்லை.

இது போன்ற விபத்துக்கள் முறையான பயிற்சி இருந்தால் தடுக்கப்படும் என MOM கூறியுள்ளது. ஆப்பரேட்டர்கள் முறையான சான்றிதழ் பெறுவதும் அவர்களை சுற்றியுள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வேண்டும்.

அதிகப்படியான விபத்து காயங்கள், உயிரிழப்புகள் போன்றவற்றை தடுக்க பணியை மட்டும் எண்ணாமல் அதற்கான திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என MOM அறிவுறுத்தியது.

போலி சான்றிதழ் அளித்தது மற்றும் பொறுப்பற்ற முறையில் விபத்து ஏற்படுத்திய காரணத்தால் அந்த ஆப்பரேட்டருக்கு 45 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts