TamilSaaga

“குழந்தைகள் சம்மந்தப்பட்ட ஆன்லைன் பாலியல் குற்றங்கள்” : சிங்கப்பூரில் 22 பேர் அதிரடி கைது

சிங்கப்பூரில் 19 முதல் 52 வயதுக்கு இடைப்பட்ட இருபத்தி இரண்டு ஆண்கள் ஆன்லைனில் குழந்தைகள் சம்மந்தப்பட்ட பாலியல் நடவடிக்கைகளை செய்ததாக சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாக சிங்கப்பூர் காவல் படை (SPF) நேற்று சனிக்கிழமை (அக்டோபர் 30) ஊடங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. “அவர்களிடம் குழந்தைகள் பாலியல் ரீதியான சீண்டல்களுக்கு தேவைப்படும் பொருட்கள் இருந்ததாகவும் SPF ஒரு செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வு அதிகாரிகள் நான்கு வார கால நடவடிக்கையின் போது, ​​Tampines Street, Hougang Street, Choa Chu Kang Grove மற்றும் Dakota Crescent போன்ற பல்வேறு இடங்களில் நடந்த அமலாக்க நடவடிக்கையில் பலர் கைது செய்யப்பட்டனர். காம்பஸ்வேல் வாக், பாசிர் ரிஸ் ஸ்ட்ரீட், புக்கிட் பாடோக் ஈஸ்ட் மற்றும் பூன் லே டிரைவ் ஆகிய இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

“கைதானவர்களிடம் இருந்து கம்ப்யூட்டர்கள், கைபேசிகள், ஹார்ட் டிஸ்க்குகள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன” என்று போலீஸார் தெரிவித்தனர். தண்டனைச் சட்டத்தின் கீழ், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்களை ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். அல்லது பிரம்படி விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குழந்தைகள் சார்ந்த பாலியல் ரீதியான பொருட்களை விற்பவர்களும் கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள்.

குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என்பது மிகவும் கண்டிக்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுகிறது என்றும் SPF தெரிவித்துள்ளது.

Related posts