தற்போது Omicron என்று அறியப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் ஒன்றின் பரவல் எதிரொலியாக, 12 நாடுகளில் இருந்து தமிழகம் வருகின்ற பயணிகளுக்கு தற்போது கடு்ம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு. இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளிலும் உருமாறிய புதிய பெருந்தொற்று வைரஸான ஓமைக்ரான் தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. ஓமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவக் கூடும் என்பதால் பல நாடுகள் புதிய கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன.
இதையும் படியுங்கள் : டிசம்பர் 3 முதல் கடுமையாகும் சிங்கப்பூரின் எல்லை நடவடிக்கை – Detailed Report
ஜெர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட சில நாடுகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதித்துள்ளது. பல ஐரோப்பா யூனியன் நாடுகள் தனிப்பட்ட வகையில் இதே தடையை விதித்துள்ளது. தென்னாபிரிக்க பயணிகளுக்கு மற்ற அண்டை நாடுகளிலும் விரைவில் தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஓமிக்ரான் பரவிய நாடுகளில் இருந்து இதற்கு முன்பே இந்தியா வந்தவர்களையும் சோதிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மேலும், விமான நிலையங்கள், துறைமுகங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்ற துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓமைக்ரான் பரவல் காரணமாக, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன், பிரேசில், வங்கதேசம், மொரீஷியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே,ஹாங்காங், இஸ்ரேல், போட்ஸ்வானா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என தமிழ்நாட்டு பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து சென்னை விமான நிலையம் வந்திறங்குபவர்களிடம் PCR அல்லது RT-PCR சோதனை மேற்கொள்ளப்படுகிறது. PCR சோதனைக்கு சுமார் 900 இந்திய ரூபாயும், RT-PCR சோதனைக்கு சுமார் 3500 ரூபாயும் வசூலிக்கப்படுவதாக நமது தமிழ் சாகா சிங்கப்பூருக்கு நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி கிடைத்துள்ளது. இதில் PCR சோதனை முடிவுகள் பெற 5 மணிநேரத்திற்கு மேலே ஆகும் என்றும் RT-PCR சோதனை முடிவு 1 மணிநேரத்திற்குள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.