SINGAPORE: உட்லண்ட்ஸில் இன்று (செப்.1) காலை டவர் ட்ரான்சிட் பேருந்து மீது கார் மோதியதில் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் அவென்யூ 9 மற்றும் உட்லண்ட்ஸ் அவென்யூ 4 சந்திப்பில், இன்று காலை 6.10 மணியளவில் இந்த விபத்து குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை க்கு(SCDF) தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் அவென்யூ 9 மற்றும் உட்லண்ட்ஸ் அவென்யூ 4 சந்திப்பில், மஞ்சள் நிற கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அதன் பாதை straight road என்பதால், வேகம் குறையாமல் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது மற்றொரு சாலையில் இருந்து வந்த போது, மஞ்சள் நிற கார் வந்து கொண்டிருந்த திசையில் வலது பக்கம் திரும்பியது.
இதை சற்றும் எதிர்பார்க்காத கார் ஓட்டுநர், வாகனத்தை நிறுத்த எவ்வளவோ முயற்சி செய்தும், வேகத்தின் காரணமாக காரை கட்டுப்படுத்த முடியாமல், நேராக பேருந்தின் மீது பலத்த சப்தத்துடன் மோதியது.
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பேருந்தில் பயணம் செய்த 9 பயணிகளுக்கும் காயம் ஏற்பட்ட நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
Khoo Teck Puat மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒன்பது பேரில், இருவர் படுகாயமடைந்துள்ளதாக சீன நாளிதழான Lianhe Zaobao தெரிவித்துள்ளது.
பேருந்தின் நடுப்பக்கத்தில் கார் பலமாக மோதியதில், அதன் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இதனால், சம்பவ இடத்திலேயே டிரைவர் உயிரிழந்துவிட்டதாக SCDF கூறியுள்ளது.