TamilSaaga

அங்கே வேலை இல்லை… இங்கே சம்பளம் இல்லை…கேள்விக்குறியாகும் NRI ஊழியர்களின் நிலை… இப்படியே சென்றால்?

சாப்ட்வேர் வேலை என்றாலே நம்ம ஊர்களில் தற்பொழுது வரை மிகவும் கௌரவமான நிலையாகதான் பார்க்கப்பட்டு வருகின்றது. மிடுக்கான தோற்றம், வியர்வை இல்லாத வேலை,கை நிறைய சம்பளம் என ஏகப்பட்ட சலுகைகளை போட்டி போட்டு நிறுவனங்கள் ஊழியர்களுக்கு அளித்து வந்தன. எனவேதான் எங்கே வேலை செய்கிறீர்கள் என்று கேட்டால், நான் ஐடியில் வேலை செய்கிறேன் என்று பதில் சொல்வதை நம் இளைஞர்கள் பெருமையாக கருதினர்.

அதிலும் வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்பவர்கள் என்றால் இன்னும் கெத்து தான். என் மகன் அமெரிக்காவில் வேலை செய்கின்றான், லண்டனில் வேலை செய்கிறான் என்று பெற்றோர்கள் பெருமையாக சொல்வதை நாம் கேட்டிருப்போம். ஆனால், தற்பொழுது நிலை தலைகீழாக மாறி வருகின்றது. இந்தியாவில் பெரும்பாலான முன்னணி ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்துவரும் நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள ஐடி நிறுவனங்களும் ஆட் குறைப்பில் ஈடுபடுகின்றன.

இங்கு உள்ள ஊழியர்கள் ஒரு கம்பெனியில் வேலை இழந்தாலும் அடுத்த கம்பெனியில் அதைவிட குறைவாக சம்பளம் இருந்தாலும் உடனடியாக மாறி விடுகின்றனர். ஆனால் வெளிநாடுகளில் வேலை செய்யும் ஐடி ஊழியர்கள் இங்கு பெறுகின்ற சம்பளத்தை விட பல மடங்கு அதிகம் பெற்று இருப்பார்கள். அவர்கள் இங்கு வந்து வேலை பார்க்கலாம் என்று நினைத்தாலும் ஒரு வேலைக்கு நூறு திறமையான ஆட்கள் ரெடியாக நிற்கின்றனர்.

எனவே சாப்ட்வேரில் வேலை செய்யும் வெளிநாட்டு ஊழியர்களின் நிலை தற்பொழுது கேள்விக்குறியாகியுள்ளது 2024 ஆம் ஆண்டிலும் இதேபோன்று பொருளாதார மந்த நிலையானது நீடித்தால் வெளிநாடுகளில் வேலை செய்யும் பல ஐடி ஊழியர்களின் நிலை கேள்விக்குறியாகும்படி உள்ளது.

Related posts