TamilSaaga

“சிங்கப்பூரில் இன்று முதல் அமலான புதிய கட்டுப்பாடுகள்” : நீங்கள் கட்டாயம் அறியவேண்டிய சில தகவல்கள்

சிங்கப்பூர், தடுப்பூசி – வேறுபட்ட பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்படும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 9) வெளியிட்ட அறிக்கையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து உணவு மற்றும் பானம் (F&B) நிறுவனங்களில் தற்போது நடைமுறையில் இருக்கும் இந்த நடவடிக்கைகள், இன்று புதன்கிழமை (அக்டோபர் 13) முதல் ஷாப்பிங் மால்கள், பொழுதுபோக்கு மையங்கள், மற்றும் ஹாக்கர் சென்டர்கள் மற்றும் காபி ஷாப் போன்ற இடங்களுக்கு மேலும் விரிவுபடுத்தப்படும் என்று கூறியது.

விரிவாக்கப்பட்ட கந்த கட்டுப்பாடுகளின் கீழ், தடுப்பூசி போடப்படாதவர்கள் ஹாக்கர் மையங்கள் மற்றும் காபி கடைகளில் சாப்பிட முடியாது. ஆனால் அவர்கள் பார்சல் எடுத்துச் செல்லும் வசதி அமலில் இருக்கும். ஆனால் தற்போதைய நடவடிக்கைகள் F & B விற்பனை நிலையங்களில் உணவருந்த அனுமதிக்காது. சரி இந்த சூழலில் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய, மற்றும் மக்களிடையே உள்ள சில பொதுவான சந்தேகங்களுக்கு விடை அளிக்கப்பட்டுள்ளது.

கேள்வி : 12 வயது அல்லது அதற்கும் குறைவான குழந்தைகள் உணவருந்த அனுமதிக்கப்படுகிறார்களா?, அவர்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்பதால் ஷாப்பிங் மால்கள் மற்றும் பிற இடங்களைப் பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்களா?

பதில் : ஆமாம், அவர்கள் அனுமதிக்கப்படுவார்கள், ஆனால் ஒரு சிறப்பு மேற்பார்வையின் கீழ் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

கேள்வி : யார் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாக கருதப்படுகிறது?

பதில் : முன்பு கூறியதை போலவே ஃபைசர்-பயோஎன்டெக்/கொமர்னாட்டி, மாடர்னா அல்லது பிற உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டு பட்டியல் தடுப்பூசிகளின் முழு விதிமுறையைப் பெற்ற 14 நாட்களுக்குப் பிறகு ஒரு நபர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாகக் கருதப்படுகிறார்.

கேள்வி : தடுப்பூசி போடாதவர்கள் ஷாப்பிங் மால்களில் நுழைய முடியுமா?

பதில் : இல்லை, தடுப்பூசி போடாதவர்கள் ஷாப்பிங் மால்கள் அல்லது பெரிய தனி கடைகளில் நுழைய முடியாது. இருப்பினும், பெரிய மற்றும் Standalone என்று அழைக்கப்படும் பல்பொருள் அங்காடிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

குறிப்பு : மருத்துவ தேவை உள்ளவர்கள் (தடுப்பூசி போடாதவர்கள்) உரிய ஆவணங்களுடன் மால்களில் நுழைய அனுமதி அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related posts