TamilSaaga

சோங் பாங் மற்றும் வாம்போவா டிரைவ் சந்தைகள் : மீண்டும் இயங்க அனுமதி – NEA அறிவிப்பு

சிங்கப்பூரில் ஜூரோங் ஃபிஷரி போர்ட் மற்றும் ஹாங் லிம் மார்க்கெட், உணவு மைய கிளஸ்டருடன் இணைக்கப்பட்ட பெருந்தொற்று வழக்குகள் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக மூடப்பட்ட மேலும் இரண்டு சந்தைகள் இந்த வாரம் மீண்டும் திறக்கப்படும் என்று தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் (NEA) நேற்று புதன்கிழமை (ஆகஸ்ட் 4) தெரிவித்துள்ளது.

சோங் பாங் சந்தை இன்று வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வாம்போவா டிரைவ் சந்தை நாளை வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்கப்படும். இந்த சந்தைகள் பெருந்தொற்று அச்சம் காரணமாக கடந்த ஜூலை 21 மற்றும் ஜூலை 22 முதல் மூடப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டு சந்தைகளிலும் முழுமையான சுத்தம் மற்றும் கிருமி நீக்கம் செய்யப்பட்டுள்ளன. திங்களன்று ஜூரோங் ஃபிஷரி போர்ட் கிளஸ்டருடன் இணைக்கப்பட்ட சுகாதார அமைச்சின் (MOH) க்ளஸ்டர்களின் பட்டியலில் இருந்து இந்த இரண்டு சந்தைகளும் நீக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த சந்தைகளில் வேலை செய்பவர்கள் தொடர்ந்து பெருந்தொற்றுக்கு சோதனை செய்யப்படுவார்கள். மேலும் பாதுகாப்பு வளாகத்திற்குள் நுழைய Trace Together வேண்டும் என்றும் NEA நேற்று புதன்கிழமை வெளியிட்ட ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது. “சந்தைகள் மற்றும் விற்பனையாளர் மையங்களில் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அனைத்து ஸ்டோல் ஹோல்டர்களும் ஸ்டால் உதவியாளர்களும் 14 நாள் சுழற்சி முறையில் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts