ஒவ்வொரு ஆண்டும் சிங்கப்பூருக்கு வெளிநாட்டில் இருந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. படிப்பதற்காக, வேலை செய்வதற்காக, தொழில் செய்வதற்காக, சுற்றுலா என பல்வேறு விஷயங்களுக்காக சிங்கப்பூருக்கு ஏராளமானோர் வந்து கொண்டிருக்கின்றன. சிங்கப்பூருக்கு வருபவர்கள் வான் வழியாக, கடல் வழியாக அல்லது நிலத்தின் வழியாக வரலாம். வேறு நாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு வருபவர்கள் தங்களுடைய இமிகிரேஷன் செக் பாயிண்ட் தாண்டி வர வேண்டி இருக்கும். கடந்த 2023 ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து வருவோரின் எண்ணிக்கை 88 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கொரோனா காலகட்டத்திற்கு முன்பு இருந்த சதவீதத்தை விட மிகவும் அதிகம். பிலைட் ட்ராவல் அதிகரித்துள்ளதால் விமான நிலையத்திலும் கூட்டம் அதிகமாகவே உள்ளது.
ஒவ்வொரு நாளும், குறிப்பாக விடுமுறை நாட்களில் வெளி நாட்டில் இருந்து வருவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் விமான நிலையத்தில் பாஸ்போர்ட் இமிகிரேஷன் வெரிஃபை செய்யும் இடத்தில் நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு காத்திருக்கும் நேரத்தை குறைக்க, நீண்ட வரிசையை குறைக்கவும்
சிங்கப்பூர் அரசு ஆட்டோமேட்டிக் லேன் எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த ஆட்டோமேட்டிக் லேன் என்றால் என்ன? இது ஒரு டிஜிட்டல் சேவை இதில் நீங்கள் உங்களுடைய பாஸ்போர்ட்டை வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. உங்களுடைய பர்சனல் டீடைல்ஸ் வைத்து, மற்றும் உங்களுடைய பயோமெட்ரிக் தகவல்களை வைத்து தானாக உங்களுடைய பயணங்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படும்.
இப்படி தங்களுடைய பயண விவரங்களை சேகரிக்கப்பட்ட டேட்டா சிங்கப்பூரின் அரசியல் சார்ந்த நிறுவனத்தில் பாதுகாக்கப்படும். ஒவ்வொரு முறையும் நீங்கள் பயணம் செய்யும்போது உங்களுடைய பயோமெட்ரிக் (அதாவது கருவிழி, விரல் ரேகை) வைத்து பயண விவரங்கள் அப்டேட் செய்யப்படும். இதன் மூலம் நீங்கள் உங்களுடைய பாஸ்போர்ட் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் திரும்பி செல்லும் போது அவர்களுடைய பாஸ்போர்ட்டை சரி பார்க்க தேவையில்லை. அதற்கு பதில் இந்த ஆட்டோமேட்டிக் -ஐ பயன்படுத்தலாம். இதன் மூலம் உங்களுடைய நேரம் மிச்சமாகும். கடந்த ஆண்டு 160 ஆட்டோமேட்டிக் லேன்கள் சிங்கப்பூர் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டது. இந்த ஆண்டு இன்னும் 230 ஆட்டோமேட்டிக் லேன்கள் அமைக்கப்பட உள்ளது.
இதுபோன்ற லேன்களை வெளிநாட்டவர் மட்டுமில்லாமல் சிங்கப்பூரை சேர்ந்தவர்களும், சிங்கப்பூரில் PR வாங்கியவர்களும் பயன்படுத்தலாம். இதை சிங்கப்பூர் வாசிகள் மற்றும் PR வாங்கியவர்கள் பயன்படுத்துவது மிகக் குறைவு. அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிங்கப்பூர் வாசிகள் மற்றும் PR பெற்றவர்களுக்கு என்று தனியாக சில ஆடோமேட்டிக் லேன்கள் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒதுக்கப்பட்ட லேன்களில் சிங்கப்பூர் சிட்டிசன் மற்றும் PR மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இது மட்டும் இன்றி இந்த ஆண்டு Automated Border Control System ABCD நிறுவப்படும் என்று ICA அறிவித்துள்ளது. இந்த காலாண்டில் குறைந்தபட்சம் 800 ABCD நிறுவ உள்ளதாக CIA நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு கவுண்டர்கள் Automated Border Control System-க மாற்றப்படும். நிறுவப்பட்ட பின் சிங்கப்பூர் சிட்டிசன் மற்றும் சிங்கப்பூரிலிருந்து புறப்படும் விசிட்டர்ஸ் ஆகியோர் தங்களுடைய பாஸ்போர்ட்டை காட்டி வெரிஃபிகேஷன் செய்ய தேவையில்லை.