TamilSaaga

பருவநிலை மாற்றம்.. சிங்கப்பூரால் சமாளிக்க முடியாது – அமைச்சர் க்ரேஸ் ஃபு பேட்டி

ஸ்காட்லாந்து கிலோஸ்கோவில் நடந்த ஐக்கிய நாடுகள் நடத்திய பருவநிலை மாறுபாடு தொடர்பான பேச்சுவார்த்தை பற்றி பேட்டியளித்த நிலைத்தன்மை மற்றும் சுற்றுப்புற அமைச்சர் க்ரேஸ் ஃபு, பருவநிலை மாறுபாடு தொடர்பாக சிங்கப்பூருக்கு சில கடமைகள் உள்ளது அதில் நாம் பங்காற்ற வேண்டும் என தெரிவித்தார்.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை சிங்கப்பூரால் சமாளிக்க முடியாது அதனால் COP26 கூட்டத்தை சிங்கப்பூர் கவனிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

இந்த உடன்பாட்டில் உள்ள நாடுகள் அடுத்த 2030ம் ஆண்டிற்கான தங்கள் குறிக்கோள் பற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும் மேலும் அவர் பாரிஸ் உடன்பாட்டுடன் அதன் வெப்ப இலக்குடன் ஒத்துப்போக வேண்டும் எனவும் அவர் கூறினார்.

உலகநாடுகளின் வெப்பநிலையானது 2 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு குறைவாக இருக்க வேண்டும் என்பது பாரிஸ் உடன்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே உலகநாடுகள் இதன்படி குறைக்க முயற்சி செய்ய வேண்டும். வெப்ப அளவு குறையாமல் அதிகரித்தால் பருவநிலை பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். திடீர் மழை, சூறாவளி போன்றவை ஏற்படலாம் என தெரிவித்துள்ளார்.

பருவநிலை மாறுபாடு பற்றிய விழிப்புணர்வு சிங்கப்பூருக்கு மேலும் தேவைப்படுகிறது. இதனால் உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவு உற்பத்தி பாதிப்பும் ஏற்படும் அபாயம் உள்ளது என்றும் அவர் எச்சரித்துள்ளார். சிங்கப்பூரில் அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related posts