TamilSaaga

சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகம் பணிபுரியும் கட்டுமானத் துறை.. பணியை நிறுத்திய 2,200 கட்டுமான நிறுவனங்கள் – ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் நிலை?

அமைச்சர் டான் கியட் ஹாவ் நேற்று (பிப்ரவரி 15) நாடாளுமன்றத்தில் பேசுகையில் மிக முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளார். அதே சமயம், இதில் தொழிலாளர்கள் மத்தியில் சில குழப்பங்களும் நிலவுகிறது.

நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் டான் கியட் ஹாவ், சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஏறக்குறைய 2,200 கட்டுமான நிறுவனங்கள் தங்களது பணியை நிறுத்திக்கொண்டன என்று கூறியுள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்றுச் சூழலில் மனிதவளப் பற்றாக்குறை, மூலப்பொருள் செலவு அதிகரிப்பு, பணப் புழக்கம் ஆகிய விவகாரங்களைக் கட்டுமானத் துறை சமாளித்து வந்துள்ளது. அதேசமயம், செலவு நெருக்கடிகளை சமாளிக்க கட்டுமான நிறுவனங்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவுத் திட்டங்கள் உதவியுள்ளதாக அமைச்சர் டான் குறிப்பிட்டுள்ளார். கட்டுமான ஆதரவுத் திட்டம், வேலை ஆதரவுத் திட்டம் உள்ளிட்டவை இதில் அடங்கும்.

கட்டுமானத் துறையில் ஏற்பட்டிருக்கும் இந்த வீழ்ச்சி தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்தியாவைச் சேர்ந்தவர்கள் சிங்கப்பூரில் கட்டுமானத் துறையில் அதிகம் பணிபுரிகின்றனர். அவர்கள் இதுகுறித்து அதிகம் கவலை கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.

மேலும் படிக்க – சிங்கப்பூர் வரும் அனைத்து பயணிகளுக்கும் ஒரு “Good News” – மிக முக்கிய “Immigration Update” கொடுத்த ICA

எனினும், இதில் ஆறுதல் அளிக்கும் சில தரவுகளும் உள்ளன. சிங்கப்பூரின் கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையம் (BCA) கடந்த ஜனவரி 26ம் தேதி வெளியிட்ட தகவலில், கட்டுமானத் துறையில் இந்த ஆண்டு $27 பில்லியன் மற்றும் $32 பில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் வழங்கப்படும் என்றும், இது கடந்த 2019ம் ஆண்டு பதிவான அதே அளவாகும் என்று கூறியுள்ளது. மேலும் வரவிருக்கும் 2023 முதல் 2026 வரையிலான காலக் கட்டத்தில், திட்டமிடப்பட்ட தேவை என்பது ஆண்டுக்கு 25 பில்லியன் டாலர் முதல் 32 பில்லியன் டாலர் வரை இருக்கும் என்றும் BCA தெரிவித்துள்ளது.

BCA தரும் புள்ளிவிவரங்கள்படி, 2021ம் ஆண்டிற்கான மதிப்பீட்டில் இருந்த வேலைக்கான கொடுப்பனவுகளின் முன்னேற்றம் என்பது சுமார் $26 பில்லியனில் இருந்து இந்த ஆண்டு $29 பில்லியன் முதல் $32 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு மொத்த கட்டுமான தேவையில் 60 சதவீதத்தை அல்லது சுமார் $16 பில்லியன் முதல் $19 பில்லியன் அளவிற்கு Public Sector பங்களிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. பொதுத்துறை இந்த அளவில் இருக்க, Private Sector கட்டுமானத் தேவைகள் கடந்த 2021 உடன் ஒப்பிடும்போது $11 பில்லியன் முதல் $13 பில்லியன் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல, பழைய வளாகங்கள் மறுவடிவமைப்புக்காக காத்திருக்கும் அதே வேளையில், சிங்கப்பூர் அதன் சுற்றுலா துரையின் மறுமலர்ச்சிக்குத் தயாராகும் வகையில் ஹோட்டல்கள் மற்றும் கட்டிடங்கள் புதுப்பிக்கப்படுவதால் வணிகத் துறையின் (Commercial Sector) தேவையும் தற்போது அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சிங்கப்பூரில் தற்போது கட்டுமானத் துறைக்கான வளர்ச்சி பொதுவாக பார்க்கும்போது நல்ல உற்சாகமான நிலையில் இருந்தாலும், அது இன்னும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் தான் உள்ளது என்று BCA குழுவின் Strategic Planning and Transformation இயக்குனர் திரு தியோ ஜிங் சியோங் கூறியுள்ளார்.

மேலும் படிக்க – சீறிய தோட்டாக்கள்.. தெறித்து ஓடிய எதிரிகள்.. சிங்கப்பூரை “சிங்கமென” பாதுகாத்த “சிலோசோ கோட்டை”

BCA-Redas என்று அழைக்கப்படும் சிங்கப்பூர் ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கம் நடத்திய கருத்தரங்கில் பேசிய ஜிங், சிங்கப்பூரில் தற்போது Omicron வேறுபாடு என்பது லேசானதாக காணப்படுகிறது என்றாலும், நிறுவனங்கள் அவ்வாறு அவற்றை எடுத்துக் கொள்ளமுடியாது என்று கூறினார். Omicron மாறுபாட்டை கடினமான ஒன்றாக எடுத்துக் கொள்ளாவிடில் பாதிப்பு அதிக அளவில் ஏற்படும் என்று அவர் கூறினார். இதேபோல தொழில்துறை எதிர்கொள்ளும் சவால்களை, உள்கட்டமைப்பு மற்றும் நகர்ப்புற ஆலோசனை நிறுவனமான சுர்பனா ஜூரோங் குழுமத்தின் தலைமை நிர்வாகி திரு வோங் ஹெங் ஃபைன் கூறுகையில் “விநியோகச் சங்கிலியில் ஏற்படும் சிக்கல், தொழிலாளர் மற்றும் மூலப்பொருள் பற்றாக்குறை மற்றும் அதன் விளைவாக ஏற்படும் செலவு அழுத்தங்கள் ஆகியவை அதிக தலைவலி தரும் பிரச்சினைகளாக இருக்கின்றன” என்றார்.

“கட்டுமான நிறுவனங்கள், மூலப்பொருட்களின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் குறைக்க மாற்று கொள்முதல் அணுகுமுறைகளைப் உடனே கண்டறியவேண்டும் என்றும் திரு. வோங் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts