TamilSaaga

தனது அடுத்த பிரமாண்ட கிளையினை தொடங்கும் சிங்கப்பூர் ‘கோமள விலாஸ்’…!

சிங்கப்பூரில் உள்ள தமிழர்களுக்கெல்லாம் தமிழ்நாட்டில் உள்ளது போலவே உணர்வை தரும் இடம் என்றால் லிட்டில் இந்தியா தான். வாரத்திற்கு ஒரு முறை நமது ஊர் உணவினை சுவைப்பதற்காகவே ஏராளமான தமிழர்களை அங்கு நாம் காணலாம். அப்படி அங்கு இருக்கும் ஏராளமான உணவகங்களில் பிரபலமான உணவகம் தான் கோமள விலாஸ்.

நம் ஊர்களில் பிரபலமான இட்லி, தோசை சப்பாத்தி, பூரி மற்றும் பிரியாணி வகைகள் என அனைத்தும் அங்கு கிடைக்கும். இந்நிலையில் சிங்கப்பூரில் பிரபலமான கோமள விலாஸ் தனது மற்றொரு புதிய கிளையை செராங்கூன் சாலையில் திறக்க இருப்பதை அறிவித்துள்ளது. முஸ்தபா சென்டர் அருகே திறக்கப்படும் புதிய கிளையானது நவம்பர் 1- ம் தேதி முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இயங்கி வரும் பிரதான ஹோட்டலில் இருந்து சுமார் 600 மீட்டர் தொலைவில் இந்த புது உணவகம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஹோட்டலின் உணவு வகைகள் மற்றும் பொருட்களின் விலை ஆகியவை பழைய கடையில் உள்ள விலையை போலவே பின்பற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 60 வாடிக்கையாளர் வரை ஒன்றாக அமர்ந்து உணவு உண்ண முடியும் என நிறுவனத்தின் உரிமையாளர் அறிவித்துள்ளார். ஏற்கனவே பஃபல்லோ சாலையில் இயங்கி வந்த உணவகம் ஆனது கொரோனா நோய் தொற்று காலத்தில் மூடப்பட்ட பொழுது புதிதாக உணவகம் திறக்க வேண்டும் எண்ணம் தனது மனதில் தோன்றியதாகவும் தற்பொழுது அது நிறைவேறி உள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் சிங்கப்பூருக்கு வந்த பொழுது சிங்கப்பூர் பிரதமர் அவரை கோமள விலாஸ் உணவகத்திற்கு அழைத்துச் சென்று உணவு அருந்த செய்த நிகழ்ச்சி ஆனது சமூக ஊடகங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts